தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு அமைப்பு (வேவ்ஸ்)வழங்கும் அனிமேஷன் துறையில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி
प्रविष्टि तिथि:
29 NOV 2024 6:13PM
|
Location:
PIB Chennai
உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு அமைப்பு வழங்கும் அனிமேஷன் துறையில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை, அனிமேஷன் படங்களுக்கான சர்வதேச கூட்டமைப்புடன் இணைந்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்த விருது வழங்கும் விழாவில், பங்கேற்பாளர்களாக கலந்து கொள்வதற்கான பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பதிவு செய்து கொள்வதற்கான இறுதி நாள் அடுத்த மாதம் 15- தேதியாகும்.
நாட்டின் அனிமேஷன் படங்கள் மெய்நிகர் காட்சிகள், போன்ற படைப்பாற்றல் மிக்க அம்சங்களில் சிறந்த சாதனையாளர்களாக விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இதில் சிறந்த குணச்சித்திர அனிமேஷன் படங்கள்,சிறந்த மெய்நிகர் காட்சி அமைப்பு, சிறந்த குறும்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது
----
TS/LKS/KPG/KR/DL
रिलीज़ आईडी:
2079174
| Visitor Counter:
71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Urdu
,
Khasi
,
English
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam