தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நாளைய முன்னணி திரைப்பட இயக்குநர்களுக்கான தளமாக ஐஎஃப்எஃப்ஐ அமைந்துள்ளது
இந்த ஆண்டு, சர்வதேச திரைப்பட விழா கடந்த கால ஜாம்பவான்களுக்காகவும், எதிர்கால சாதனையாளர்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது - தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு
இளைஞர்களின் துடிப்பான உற்சாகம், உற்சாகமான சூழலுடன், கோவாவில் நடைபெற்று வரும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) நடைபெற்ற கிரியேட்டிவ் மைண்ட்ஸ் ஆஃப் டுமாரோ (சிஎம்ஓடி - CMOT) எனப்படும் 'நாளைய படைப்பாளி மனங்கள்' நிகழ்வின் நிறைவு விழா அமைந்தது.
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் திரைப்பட இயக்குநர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு ஆதரவு வழங்கும் முன்னணி தளமாக சிஎம்ஓடி (CMOT) உருவெடுத்துள்ளது. இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 1,070 உள்ளீடுகள் இதற்காகப் பெறப்பட்டது.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக 48 மணி நேரத்தில் திரைப்படத் தயாரிப்பு சவால் நடைபெற்றது. இதில் பங்கேற்பாளர்கள், தலா 20 பேர் கொண்ட ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, "தொழில்நுட்ப யுகத்தில் உறவுகள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட குறும்படங்களை உருவாக்கினர். இந்த சவால் நவம்பர் 2024 21 முதல் 23 வரை நடைபெற்றது. இது அணியின் படைப்பாற்றலை சோதிப்பதாக அமைந்தது.
இந்த ஆண்டு, சிஎம்ஓடி-யில் 48 மணி நேர திரைப்படத் தயாரிப்பு சவாலின் வெற்றியாளர்கள்:
1. சிறந்த படம்: குல்லு
*சிறந்த படம் (ரன்னர்-அப்): வீ ஹியர் தி சேம் மியூசிக்
2. சிறந்த இயக்குநர்: அர்ஷலி ஜோஸ் (குல்லு)
3. சிறந்த திரைக்கதை: ஆதிராஜ் போஸ் (லவ்பிக்ஸ் சந்தா)
4. சிறந்த நடிகை: விசாகா நாயர் (லவ்பிக்ஸ் சந்தா)
5. சிறந்த நடிகர்: புஷ்பேந்திர குமார் (குல்லு)
பங்கேற்பாளர்களைப் பாராட்டிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, மிகுந்த அழுத்தத்தின் கீழ் 48 மணி நேரத்திற்குள் இதுபோன்ற முன்மாதிரியான படங்களை தயாரிப்பது ஒரு சாதனை என்றார். இங்குள்ள ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒரு வெற்றியாளர் என அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு, திரைப்பட விழா நமது நாட்டின் இளைஞர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது என்றார். இந்த ஆண்டு நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழா கடந்த கால ஜாம்பவான்களுக்கும் எதிர்கால சாதனையாளர்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டபோது, ஷார்ட்ஸ் இன்டர்நேஷனலின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கார்டர் பில்ச்சர், பங்கேற்பாளர்களைப் பாராட்டினார். "இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட படங்களின் தரம் உள்ளடக்கம் சிறப்பானது" என்று குறிப்பிட்டார்.
இங்கிலாந்தைத் தலைமை இடமாகக் கொண்ட ஷார்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட 48 மணிநேர திரைப்படத் தயாரிப்பு சவால் இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடுகளின் கீழ் தனித்துவமான வாய்ப்பை வழங்குவதாக அமைந்தது.
*****
PLM/KV
(Release ID: 2076582)
Visitor Counter : 17