பிரதமர் அலுவலகம்
இந்தியாவை அறிந்து கொள்ளவும் வினாடி வினாவில் பங்கேற்குமாறு புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
प्रविष्टि तिथि:
23 NOV 2024 9:15AM by PIB Chennai
இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறு புலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் சேர்ந்த நண்பர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். வினாடி வினா இந்தியாவிற்கும் உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துகிறது என்றும், நமது வளமான பாரம்பரியம் மற்றும் துடிப்பான கலாச்சாரத்தை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான அற்புதமான வழியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
“நமது வம்சாவளியினருடனான பிணைப்பை வலுப்படுத்துதல்!
#BharatKoJaniye வினாடி வினாவில் பங்கேற்க வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூகம் மற்றும் பிற நாடுகளின் நண்பர்களை வலியுறுத்துங்கள்
இந்த வினாடி வினா இந்தியாவிற்கும் உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர் மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துகிறது. நமது வளமான பாரம்பரியம் மற்றும் துடிப்பான கலாச்சாரத்தை மீண்டும் கண்டறிய இது ஒரு அற்புதமான வழியாகும்.
வெற்றியாளர்களுக்கு #IncredibleIndia--ன் அற்புதங்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்.’’
*****
PKV/KV
(रिलीज़ आईडी: 2076260)
आगंतुक पटल : 68
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Bengali
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam