பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் திரு டெனிஸ் மாந்துரோவ், பிரதமர் திரு மோடியை சந்தித்துப் பேசினார்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                11 NOV 2024 8:55PM by PIB Chennai
                
                
                
                
                
                
                ரஷ்ய கூட்டமைப்பின் முதல் துணைப் பிரதமர் மேதகு திரு  டெனிஸ் மாந்துரோவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார். 
வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள், எரிசக்தி, இணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். 
இந்திய-ரஷ்ய சிறப்பு மற்றும் சலுகை பெற்ற உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்காக அதிபர் திரு புட்டினுடனான தனது சமீபத்திய சந்திப்புகளின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கு இரு தரப்பு குழுக்களின் நீடித்த மற்றும் கூட்டு முயற்சிகளை பிரதமர் வரவேற்றார்.
அதிபர் திரு புட்டினுக்கு பிரதமர் தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவருடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் ஆவலை வெளிப்படுத்தினார்.
***
(Release ID: 2072560)
BR/KR
                
                
                
                
                
                (Release ID: 2072611)
                Visitor Counter : 62
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam