பிரதமர் அலுவலகம்
அற்புதமானது, ஒப்பற்றது, கற்பனை செய்ய முடியாதது! பிரம்மாண்டமான, தெய்வீக தீபோத்சவத்திற்காக அயோத்தி மக்களுக்கு வாழ்த்துகள்: பிரதமர்
Posted On:
30 OCT 2024 10:44PM by PIB Chennai
பிரம்மாண்டமான, தெய்வீக தீபோத்சவ கொண்டாட்டங்களையொட்டி அயோத்தி மக்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது எக்ஸ் வலைத்தளத்தில், பகவான் ஸ்ரீ ராமரின் புனித பிறப்பிடமான அயோத்தியில் நடைபெறும் பேரொளி திருவிழா குறித்து தனது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
"அற்புதமானது, ஒப்பிட முடியாதது, கற்பனை செய்ய முடியாதது!
பிரம்மாண்டமான, தெய்வீக தீபோத்சவத்திற்காக அயோத்தி மக்களுக்கு வாழ்த்துகள்! ராம் லல்லாவின் புனித பிறப்பிடத்தில் உள்ள இந்த ஒளித்திருவிழா, லட்சக் கணக்கான விளக்குகளால் ஒளிர்வது உணர்ச்சிகரமானதாக இருக்கும். அயோத்திதாமில் இருந்து வெளிப்படும் இந்த ஒளிக்கதிர், நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய உற்சாகத்தையும், புதிய சக்தியையும் நிரப்பும். பகவான் ஸ்ரீராமர் நாட்டுமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், வெற்றிகரமான வாழ்க்கையையும் வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஜெய் ஸ்ரீராம்!
இந்தத் தீபாவளியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
"தெய்வீக அயோத்தி!
புனித புருஷோத்தம ஸ்ரீராமர் தனது பிரம்மாண்டமான கோயிலின் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்ட பின், முதல் தீபாவளி. அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் லல்லா கோயிலின் தனித்துவமான அழகு அனைவரையும் மூழ்கடிக்கப் போகிறது. 500 ஆண்டுகளுக்குப் பின், எண்ணற்ற தியாகங்கள், ராம பக்தர்களின் தொடர்ச்சியான தியாகம் மற்றும் தவத்திற்குப் பின் இந்த புனிதமான தருணம் வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வின் சாட்சிகளாக நாம் அனைவரும் ஆகியிருப்பது நமது அதிர்ஷ்டம். பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையும், அவரது கொள்கைகளும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதில் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஜெய் சியா ராம்!"
***
(Release ID: 2069755)
TS/SMB/AG/KR
(Release ID: 2070537)
Visitor Counter : 23