பிரதமர் அலுவலகம்
முன்னோடி கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான திரு டி.பி.ஜி. நம்பியார் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2024 7:27PM by PIB Chennai
முன்னோடி கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான திரு. டிபிஜி நம்பியார் ஜி மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பொருளாதார ரீதியாக வலிமையாக்க வேண்டும் என்பதில் திரு டிபிஜி நம்பியார் உறுதியாக இருந்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"திரு டிபிஜி நம்பியார் ஒரு முன்னோடி கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர். இந்தியாவைப் பொருளாதார ரீதியாக வலிமையானதாக மாற்றுவதற்கு வலுவான ஆதரவாளராக இருந்தார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
***
SMB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2069907)
வருகையாளர் எண்ணிக்கை : 56
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam