பிரதமர் அலுவலகம்
பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியாவின் அண்மைக் கால முன்னேற்றம் குறித்து லிங்க்டுஇன் தளப் பதிவில் பிரதமர் திரு நரேந்திர மோடி எழுதியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2024 6:09PM by PIB Chennai
வதோதராவில் சி-295 விமான உற்பத்தி வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனை குறித்து தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு லிங்க்டுஇன் தளத்தில் ஒரு பதிவை இன்று (30.10.2024) எழுதியுள்ளார்.
அந்த பதிவின் தலைப்பு 'இந்தியாவின் பாதுகாப்பு புரட்சி விண்ணை எட்டுகிறது!' என்பதாகும்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"எனது இப்போதைய லிங்க்டுஇன் ( @LinkedIn ) பதிவு, பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியாவின் அண்மைக் கால முன்னேற்றங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்தத் துறையின் வளர்ச்சிக்கான உந்துதலை இன்னும் அதிகரிக்கப் போகிறோம்".
***
TS/PLM/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2069669)
வருகையாளர் எண்ணிக்கை : 83
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam