பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸின் இந்தியப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் (அக்டோபர் 28-29, 2024)

Posted On: 28 OCT 2024 6:30PM by PIB Chennai

முடிவுகள்

  1. ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட சி 295 விமான ஆலையை வதோதராவில் பிரதமரும், ஸ்பெயின் அதிபரும் கூட்டாகத் தொடங்கி வைத்தனர்.
  2. ரயில் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  3. சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்புக்கும் பரஸ்பர    உதவிக்குமான ஒப்பந்தம்.
  4. 2024 - 2028 ஆண்டுக்கான கலாச்சார பரிமாற்றத் திட்டம்.
  5. 2026-ம் ஆண்டை இந்தியா - ஸ்பெயின் கலாச்சாரம், சுற்றுலா, செயற்கை நுண்ணறிவு ஆண்டாக அறிவித்தல்
  6. பெங்களூருவில் ஸ்பெயின் தூதரகம் அமைக்கவும், பார்சிலோனாவில் இந்திய தூதரகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  7. இந்தியாவிலும் ஸ்பெயினிலும் பரஸ்பர முதலீடுகளை எளிதாக்குவதற்காக இந்தியாவின் டிபிஐஐடியும் ஸ்பெயினின் வர்த்தக அமைச்சகமும் இணைந்து விரைவு செயல்முறைகளை ஏற்படுத்துதல்.
  8. ஒலி, ஒளி கூட்டுத் தயாரிப்பு உடன்படிக்கையின் கீழ் இணைந்த ஆணைக்குழுவை  உருவாக்குதல் 

*****

TS/PLM/KPG/DL




(Release ID: 2068988) Visitor Counter : 26