பிரதமர் அலுவலகம்
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் உதய தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
24 OCT 2024 10:41AM by PIB Chennai
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் உதய தினத்தை முன்னிட்டு இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையை வீரம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளம் என்றும் பாராட்டியுள்ளார். இயற்கைப் பேரழிவுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது அவர்களின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இது மக்களிடையே மிகுந்த பெருமையை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதய தின வாழ்த்துகள். இந்தப் படையானது வீரம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது. மிகவும் சவாலான நிலப்பரப்புகள் மற்றும் கடினமான பருவநிலை சூழல்கள் உட்பட பல நிகழ்வுகளில் அவை நம்மைப் பாதுகாக்கின்றன. கூடுதலாக, இயற்கைப் பேரழிவுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது அவர்களின் முயற்சிகள் மக்கள் மத்தியில் மிகுந்த பெருமையை ஏற்படுத்துகின்றன. @ITBP_official"
***
(Release ID: 2067564)
TS/PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2067613)
आगंतुक पटल : 148
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Manipuri
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam