பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் வியன்டியானுக்குப் பிரதமரின் பயணம் (அக்டோபர் 10 -11, 2024) : மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் பட்டியல்

Posted On: 11 OCT 2024 12:39PM by PIB Chennai

வ. எண்

எம்ஓயூ/ஒப்பந்தம்/அறிவிப்பு      

இந்தியத் தரப்பில் கையெழுத்திட்டவர்

லாவோ தரப்பில் கையெழுத்திட்டவர்

1

இந்தியக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சகம், லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் துணைப் பிரதமரும்  தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜெனரல் சான்சமோனே சன்யாலத்

2

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் தகவல், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின்  லாவோ தேசிய தொலைக்காட்சி மற்றும் இந்தியக் குடியரசின் பிரசார் பாரதி இடையே ஒளிபரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

லாவோவுக்கான இந்திய தூதர் திரு பிரசாந்த் அகர்வால்

லாவோ தேசிய தொலைக்காட்சி தலைமை இயக்குநர் டாக்டர் அம்கா வோங்மெயுங்கா

3

சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்காக லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசுக்கும் இந்தியக் குடியரசுக்கும் இடையே ஒப்பந்தம்

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால்

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் நிதி அமைச்சகத்தில் தலைமை இயக்குநர் திரு பெளகாவ்காம் வன்னவோங்சே

4

லுவாங் பிரபாங் மாகாணத்தில் பாலக்-பாலம் (லாவோ ராமாயணம்) நாடகத்தின் நிகழ்த்துக் கலை பாரம்பரியத்தைப் பாதுகாப்பது குறித்த விரைவுப் பலன் திட்டம்

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசுக்கான இந்திய தூதர் திரு பிரசாந்த் அகர்வால்

 

லுவாங் பிரபாங் தகவல் துறை இயக்குநர் திருமதி சௌடாபோன் கோம்தாவோங்

5

லுவாங் பிரபாங் மாகாணத்தில் வாட் பாக்கியே புதுப்பித்தல் குறித்த விரைவுப் பலன் திட்டம்

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசுக்கான இந்திய தூதர் திரு பிரசாந்த் அகர்வால்

 

லுவாங் பிரபாங் தகவல்,கலாச்சாரத்  துறை இயக்குநர் திருமதி சௌடாபோன் கோம்தாவோங்

6

சம்பாசக் மாகாணத்தில் உள்ள நிழல் பொம்மலாட்ட அரங்கச் செயல்பாட்டைப் பாதுகாப்பது குறித்த விரைவுப் பலன் திட்டம்

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசுக்கான இந்திய தூதர் திரு பிரசாந்த் அகர்வால்

 

பான் நகரில் அலுவலகத்தைக் கொண்ட சம்பாசக் சடாவோ பொம்மலாட்ட அரங்கத்தின் தலைவர் திரு சோம்சாக் போம்சலியான்

7 இந்தியா-ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சிக் கூட்டான்மை  நிதியத்தின் மூலம் சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியுடன் உணவு செறிவூட்டல் மூலம் லாவோ ஜனநாயக குடியரசில் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான திட்ட அறிவிப்பு.

***********

SMB/DL



(Release ID: 2064188) Visitor Counter : 22