பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மும்பை மெட்ரோ ரயிலில் உள்ளூர் மக்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடல்

Posted On: 05 OCT 2024 9:15PM by PIB Chennai

ஆண் பயணி: நான் செயற்கை நுண்ணறிவு குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

பிரதமர்: நீங்கள் செயற்கை நுண்ணறிவு குறித்து ஆராய்ச்சி  செய்வது சிறப்பானது.

ஆண் பயணி: ஐயா, இந்தியாவில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தவும் மருந்து துறையில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்று நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

பெண் பயணி: நான் சமூகவியலில் பி. படிக்கிறேன், எதிர்காலத்தில் சமூகத்திற்கு பங்களிக்க விரும்புகிறேன்.

பெண் பயணி: உங்கள் திட்டங்கள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளேன். உதாரணமாக, நான் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளேன்.

பெண் பயணி: கைப்பைகள் தயாரிக்கும் சிறு தொழில் செய்து வருகிறேன். ஸ்வநிதி திட்டத்தைப் பயன்படுத்தி எனது வணிகத்தை விரிவுபடுத்தினேன்.

பிரதமர்: நல்லது!

பிரதமர்: ஷிண்டே அறிமுகப்படுத்திய திட்டத்தின் மூலம் நீங்கள் அடைந்த பலன்கள் என்ன?

பெண் பயணி: ஆம், பெண் சகோதரி திட்டத்தால் நாங்கள் பெரிதும் பயனடைந்தோம்.

பிரதமர்: உங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் பயனடைந்துள்ளீர்களா?

பெண் பயணி: ஆமாம் ஐயா, எங்களிடம் பாலஞ்சல் என்ற பெண்கள் அமைப்பு உள்ளது. மேலும் அனைத்து பெண்களும் படிவங்களை பூர்த்தி செய்து நன்மைகளைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

பிரதமர்: பணம் கிடைத்ததா?

பெண் பயணி: ஆம், ஐயா, இந்த வாரம் கிடைத்தது.

பிரதமர்: நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

பெண் பயணி: ஆமாம் ஆமாம் சார்.

பிரதமர்: நீங்கள் எத்தனை ஆண்டுகளாக வேலை செய்கிறீர்கள்?

மெட்ரோ தொழிலாளி: சார், ஏழு வருஷம் ஆச்சு.

பிரதமர்: நீங்கள் இப்போது வேலையில் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களா?

மெட்ரோ தொழிலாளி: ஆமாம், ஐயா, நாங்கள் நிறைய அனுபவங்களைப் பெற்றுள்ளோம்.

பிரதமர்: எனவே இப்போது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் மெட்ரோ பாதைகளை அமைக்கலாம், சரிதானே?

மெட்ரோ தொழிலாளி: ஆமாம் சார், எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். எங்களுக்கு இப்போது நிறைய அனுபவம் உள்ளது.

பிரதமர்: உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

மெட்ரோ தொழிலாளி: ஆமாம் சார்.

பிரதமர்: என்றாவது ஒரு நாள், உங்கள் குடும்பத்தை மெட்ரோவில் சவாரி செய்ய அழைத்துச் செல்லுங்கள்.

மெட்ரோ தொழிலாளி: ஆமாம் சார், நாங்கள் அவர்களை அழைத்துச் செல்வோம்.

பிரதமர்: இதை உருவாக்க நீங்கள் கடுமையாக உழைத்தீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.

மெட்ரோ தொழிலாளி: சரி சார்.

***

(Release ID: 2062725)

PKV/AG/KR


(Release ID: 2063783) Visitor Counter : 27