மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav g20-india-2023

2020-21 முதல் 2025-26 வரை பெரிய துறைமுகங்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர் வாரிய ஊழியர்கள் / தொழிலாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட உற்பத்தித்திறனுடன் இணைந்த வெகுமதி (பி.எல்.ஆர்)திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 03 OCT 2024 8:36PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பெரிய துறைமுகங்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர் வாரிய ஊழியர்கள்/தொழிலாளர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள உற்பத்தித் திறனுடன் இணைந்த வெகுமதி (பி.எல்.ஆர்) திட்டத்தை 2020-21 முதல் 2025-26 வரை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2020-21 முதல் 2025-26 வரை பொருந்தக்கூடிய மாற்றியமைக்கப்பட்ட பி.எல்.ஆர் திட்டம் பெரிய துறைமுக அதிகாரிகளின் சுமார் 20,704 ஊழியர்கள் மற்றும் துறைமுக தொழிலாளர் வாரிய ஊழியர்கள் / தொழிலாளர்களுக்கு பயனளிக்கும். இந்த முழு காலத்திற்கான மொத்த நிதிச் சுமை சுமார் ரூ.200 கோடியாக இருக்கும்.

2020-21 முதல் 2025-26 வரையிலான அனைத்து பெரிய துறைமுக ஆணையங்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர் வாரிய ஊழியர்கள் / தொழிலாளர்களுக்கான உற்பத்தித்திறன் இணைந்த வெகுமதி (பி.எல்.ஆர்) திட்டத்தை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது. உற்பத்தித்திறன் |போனஸ் கணக்கிடுவதற்கான மாத ஊதிய உச்சவரம்பின் அடிப்படையில் லிங்க்டு ரிவார்டு (பி.எல்.ஆர்) கணக்கிடப்பட்டுள்ளது. துறைமுக வாரியான செயலாற்றுகையின் எடையை 50% இலிருந்து 55% வரை அதிகரிப்பதன் மூலம் ஆண்டுதோறும் பி.எல்.ஆர் செலுத்தப்படும். அகில இந்திய துறைமுகங்களின் செயல்திறன் முக்கியத்துவம் 2025-26 வரை 40% ஆக குறையும். இது அகில இந்திய துறைமுக செயல்திறன் மற்றும் குறிப்பிட்ட துறைமுக செயல்திறனுக்கு தற்போதுள்ள 50% சம முக்கியத்துவத்திற்கு மாற்றாக இருக்கும். உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றம் பெரிய துறைமுகங்களுக்கிடையே போட்டியுடன் செயல்திறன் காரணியையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன், துறைமுகத் துறையில் சுமூகமான பணிச்சூழல் மற்றும் தொழில் நல்லுறவை மேம்படுத்த இத்திட்டம் வழிவகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061670

***

BR/RR/KR



(Release ID: 2061845) Visitor Counter : 13