பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்

प्रविष्टि तिथि: 03 OCT 2024 10:50AM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில், அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் நடைபெறும் கௌடில்யா பொருளாதார மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.

மூன்றாவது கௌடில்யர் பொருளாதார மாநாடு, அக்டோபர் 4 முதல் 6 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவிசார் பொருளாதார பாதிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைப் பாதுகாப்பதற்கான கொள்கை நடவடிக்கைக்கான கோட்பாடு போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தும்.

இந்திய மற்றும் சர்வதேச அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள்  ஆகியோர் இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய தெற்கின் பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சில பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். இந்த மாநாட்டில், உலகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

கௌடில்யா பொருளாதார மாநாட்டுக்கு, பொருளாதார வளர்ச்சி நிறுவனம், நிதி அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

***

(Release ID: 2061357)

MM/AG/KR


(रिलीज़ आईडी: 2061407) आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali-TR , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam