பிரதமர் அலுவலகம்
'எதிர்கால உச்சி மாநாட்டில்' பிரதமர் உரை
Posted On:
23 SEP 2024 11:09PM by PIB Chennai
நியூயார்க்கில் இன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 'எதிர்கால உச்சி மாநாட்டில்' பிரதமர் உரையாற்றினார்.
உச்சி மாநாட்டின் கருப்பொருள் 'சிறந்த நாளைக்கான பலதரப்பு தீர்வுகள்'. இந்த மாநாட்டில் ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
எதிர்காலச் சந்ததியினருக்காக நீடித்த உலகை வடிவமைக்க வேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை பிரதமர் தமது உரையில் எடுத்துரைத்தார். உலக அமைதி, வளர்ச்சி மற்றும் செழிப்பை விரும்பும் மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கு மக்களின் சார்பாக இந்த உச்சிமாநாட்டில் தாம் உரையாற்றியதாக அவர் குறிப்பிட்டார். பிரகாசமான உலகளாவிய எதிர்காலத்திற்கான நமது கூட்டு வேட்கையில் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு முதன்மை அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த பிரதமர், நீடித்த வளர்ச்சிக்கான முன்முயற்சிகளை அதிகரிப்பதில் இந்தியாவின் வெற்றியை எடுத்துரைத்தார். இது தொடர்பாக, கடந்த பத்தாண்டுகளில் நாடு 250 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திய அவர், வளர்ச்சி அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் இந்தியா பெருமை கொள்கிறது என்றார். தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிக்க சமச்சீரான விதிமுறைகளுக்கு அழைப்பு விடுத்த அவர், பொது நலனுக்காக தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார். "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை வழிகாட்டும் கொள்கையாக அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
சீர்திருத்தங்கள் பொருத்தமானவை என்று குறிப்பிட்ட பிரதமர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உட்பட உலகளாவிய ஆளுகை அமைப்புகளில் அவசர சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உலகளாவிய நடவடிக்கை உலகளாவிய லட்சியத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். பிரதமரின் முழு கருத்துக்களை இங்கே காணலாம். https://bit.ly/4diBR08
உலகளாவிய டிஜிட்டல் முன்முயற்சி மற்றும் எதிர்காலத் தலைமுறைகள் குறித்த பிரகடனம் ஆகிய இரண்டு இணைப்புகளுடன், எதிர்காலத்திற்கான ஒரு ஒப்பந்தம் என்ற விளைவு ஆவணத்தை ஏற்றுக்கொண்டு உச்சிமாநாடு முடிவடைந்தது.
***
(Release ID: 2058080)
PKV/RR
(Release ID: 2058118)
Visitor Counter : 48
Read this release in:
Telugu
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Odia