பிரதமர் அலுவலகம்
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவு போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்றதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
23 SEP 2024 1:15AM by PIB Chennai
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆண்கள் மற்றும் பெண்கள் சதுரங்க அணிகள் அவர்களின் ஈர்க்கக்கூடிய செயல்திறனுக்காக அவரால் பாராட்டப்பட்டன.
சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
“45வது #FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய செஸ் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் செஸ் பிரிவுகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் செஸ் அணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறோம். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனையின் மூலம் இந்தியாவில் விளையாட்டில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி எதிர்கால சதுரங்க வீரர்கள் தங்கள் விளையாட்டில் சிறந்து விளங்க ஊக்குவிக்கட்டும்”.
***
(Release ID: 2057692)
PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2057801)
आगंतुक पटल : 143
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Assamese
,
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Punjabi
,
Gujarati