மத்திய அமைச்சரவை
பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ரபி பருவத்தில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
18 SEP 2024 3:14PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு 2024-ம் ஆண்டு ரபி பருவத்தில் (01.10.2024 முதல் 31.03.2025 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பதற்கான ரசாயனம் - உரத் துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு ரபி பருவத்திற்கான உத்தேச நிதித் தேவை தோராயமாக ரூ.24,475.53 கோடியாக இருக்கும்.
நன்மைகள்:
விவசாயிகளுக்கு மானிய விலையில், கட்டுப்படியாகும், நியாயமான விலையில் உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
சர்வதேச உரங்கள், இடுபொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு பி அண்ட் கே எனப்படும் பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான மானியம் சீரமைக்கப்படும்.
செயல்படுத்தல் உத்தி, இலக்குகள்:
பி அண்ட் கே உரங்களுக்கான மானியம் இந்த ரபி பருவத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட விகிதங்களின் அடிப்படையில் வழங்கப்படும். இது இந்த உரங்கள் விவசாயிகளுக்கு மலிவு விலையில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2055984
***
PLM/AG/DL
(Release ID: 2056169)
Visitor Counter : 46
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Nepali
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam