உள்துறை அமைச்சகம்
பத்ம விருதுகள்-2025-க்கான பரிந்துரைகளை 2024,செப்டம்பர் 15 வரை அனுப்பலாம்
Posted On:
12 SEP 2024 3:30PM by PIB Chennai
2025 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் 2025-க்கான பரிந்துரைகள் / விண்ணப்பங்களை பதிவு செய்வது 2024, மே 1 முதல் தொடங்கியுள்ளன. பத்ம விருதுகள் பரிந்துரைகளுக்கான கடைசி நாள் 2024, செப்டம்பர் 15 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளமான (https://awards.gov.in)-ல் மட்டுமே பெறப்படும்.
பரிந்துரைகள் / விண்ணப்பங்கள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள வடிவமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தொடர்புடைய விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும். இதில் பரிந்துரைக்கப்பட்ட நபர் தனது துறையில், பிரிவில் செய்த தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவையை அதிகபட்சம் 800 வார்த்தைகளில் குறிப்பிடுவது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
*****
IR/RS/KV
(Release ID: 2054195)
Visitor Counter : 73
Read this release in:
Assamese
,
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Kannada