பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஊக்கமளிக்கும் நபர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார்

Posted On: 09 SEP 2024 6:09PM by PIB Chennai

பத்ம விருதுகளுக்கான பரிந்துரை பரிசீலனையில் தீவிரமாக பங்கேற்குமாறு நாட்டு மக்களை, பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய எளிய அளவிலான கதாநாயகர்களை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை திரு மோடி வலியுறுத்தினார். பரிந்துரை நடைமுறையில் வெளிப்படையான மற்றும் பங்கேற்பு அணுகுமுறையை வலியுறுத்திய திரு மோடி, ஏற்கனவே பெறப்பட்ட பரிந்துரைகளின் எண்ணிக்கை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, மதிப்புமிக்க பத்ம விருதுகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை awards.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பரிந்துரைக்குமாறு மேலும் பலரை வலியுறுத்தினார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

கடந்த பத்து ஆண்டுகளில், எண்ணற்ற எளிய அளவிலான ஹீரோக்களை #PeoplesPadma கௌரவித்துள்ளோம். விருது பெற்றவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் எண்ணற்ற மக்களுக்கு ஊக்கமளித்துள்ளன. அவர்களின் மன உறுதியும், விடாமுயற்சியும் அவர்களின் வளமான படைப்புகளில் தெளிவாகத் தெரிகிறது. இந்த நடைமுறையை மேலும் வெளிப்படையானதாகவும், பங்கேற்பு கொண்டதாகவும் மாற்றும் உணர்வுடன், பல்வேறு பத்ம விருதுகளுக்கு மற்றவர்களையும் பரிந்துரைக்குமாறு எங்கள் அரசு மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. பல பரிந்துரைகள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பரிந்துரைகளை தாக்கல் செய்ய கடைசி நாள் இம்மாதம் 15-ம் தேதியாகும். பத்ம விருதுகளுக்கு ஊக்கமளிக்கும் நபர்களை பரிந்துரைக்குமாறு அதிகமான மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் awards.gov.in மூலம் பரிந்துரைக்கலாம்.

---

IR/KPG/DL



(Release ID: 2053234) Visitor Counter : 28