பிரதமர் அலுவலகம்

பாராலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் நவ்தீப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 08 SEP 2024 8:33AM by PIB Chennai

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 41 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் நவ்தீப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"அசாத்திய திறன்களைக் கொண்ட நவ்தீப், 2024 பாராலிம்பிக்கில் (#Paralympics2024) ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 41-ல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்! அவரது வெற்றி அவரது சிறந்த செயல்திறனின் பிரதிபலிப்பாகும். அவருக்கு வாழ்த்துகள். அவரது வெற்றியால் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. #Cheer4Bharat"

***

Release ID: 2052867

PLM/DL



(Release ID: 2052899) Visitor Counter : 18