உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா முன்னிலையில், மத்திய அரசு, திரிபுரா அரசு, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி மற்றும் அனைத்து திரிபுரா புலிகள் படை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடையே நாளை புதுதில்லியில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது
Posted On:
03 SEP 2024 4:52PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா முன்னிலையில், மத்திய அரசு, திரிபுரா அரசு மற்றும் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி மற்றும் அனைத்து திரிபுரா புலிகள் படை (ATTF) பிரதிநிதிகள் இடையே புதுதில்லியில் 2024 செப்டம்பர் 4 புதன்கிழமை அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் திரிபுரா அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையான தீவிரவாதம், வன்முறை மற்றும் மோதல் இல்லாத வளர்ச்சியடைந்த வடகிழக்கு மாநிலங்கள் என்ற தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற உள்துறை அமைச்சகம் அயராது உழைத்து வருகிறது. பிரதமர் தலைமையின் கீழ், வடகிழக்குப் பகுதியில் அமைதி மற்றும் வளத்தை ஏற்படுத்த 12 முக்கிய ஒப்பந்தங்களில் அரசு கையெழுத்திட்டுள்ளது. இவற்றில் 3 ஒப்பந்தங்கள் திரிபுரா மாநிலம் தொடர்பானவை. மோடி அரசு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் காரணமாக, சுமார் 10 ஆயிரம் பேர் ஆயுதங்களைத் துறந்து மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்
---
IR/KPG/DL
(Release ID: 2051383)
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Kannada