பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் லட்சாதிபதி சகோதரிகளுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
Posted On:
26 AUG 2024 1:46PM by PIB Chennai
பிரதமர்: "லட்சாதிபதி சகோதரிகள்" ஆகியவர்களுக்கும் அப்படி ஆகாதவர்களுக்கும் இடையே என்ன வகையான உரையாடல் நடக்கிறது?
லட்சாதிபதி சகோதரி: லட்சாதிபதி சகோதரியாக மாறியவர்களின் அனுபவங்களும் வாழ்க்கை நிலைமைகளும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டவை. அவர்கள் தற்சார்புடையவர்களாக மாறுகிறார்கள். இது அவர்களின் குடும்ப செலவுகளை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. ஐயா, எனக்கு இரண்டு மாற்றுத்திறனாளி சகோதரிகள் உள்ளனர். அவர்களுக்கு நான் ஆதரவளித்து வருகிறேன். அவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
பிரதமர்: அந்த மாற்றுத்திறனாளிகளும் லட்சாதிபதி சகோதரிகளாக மாறிவிட்டார்களா?
லட்சாதிபதி சகோதரிகள்: ஆம், உண்மைதான். அவர்களும் லட்சாதிபதிகளாக மாற நான் உதவினேன்.
பிரதமர்: அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்?
லட்சாதிபதி சகோதரி: ஒருவர் வியாபாரம் செய்கிறார். மற்றொருவர் மளிகைக் கடை நடத்துகிறார். நான் 3.5 அரை முதல் 4 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். எனது சகோதரிகள் லட்சாதிபதிகளாக மாற நான் உதவியுள்ளேன்.
லட்சாதிபதி சகோதரி: நான் ஏற்கனவே ஒரு லட்சாதிபதி. சமீபத்தில் 260 பெண்களும் லட்சாதிபதிகளா மாற உதவியுள்ளேன்.
பிரதமர்: நீங்கள் ஒரு லட்சாதிபதி சகோதரி ஆகிவிட்டீர்கள். அதாவது ஒரு வருடத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?
லட்சாதிபதி சகோதரி: ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிக்கிறேன்.
பிரதமர்: 8 லட்சம் ரூபாயா?
லட்சாதிபதி சகோதரி: ஆமாம் ஐயா.
பிரதமர்: இதை அடைய உங்களுக்கு எத்தனை ஆண்டுகள் பிடித்தன?
லட்சாதிபதி சகோதரி: எனக்கு அஞ்சு வருஷம் ஆனது சார்.
பிரதமர் : அசாம் மக்கள் உங்களை உத்வேகம் அளிக்கும் மிகப்பெரிய ஆதாரமாக பார்க்க வேண்டும்.
லட்சாதிபதி சகோதரி: ஆமாம்.. பார்க்கலாம். நான் ஜீரோவாக இருந்து ஹீரோ ஆக மாறிவிட்டேன் சார்.
பிரதமர்: நல்லது!
லட்சாதிபதி சகோதரி: எனது சுய உதவிக் குழுவின் பெயர் அதி-உத்தமம் சகி மண்டல். நாங்கள் கையால் செய்யப்பட்ட, வீட்டில் தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்கிறோம். இவை அனைத்தும் வீட்டுப் பொருட்களிலிருந்து வடிவமைக்கப்பட்டவை. சரஸ் மேளா, வைப்ரன்ட் குஜராத் போன்ற தளங்கள் எங்களுக்கு சிறந்த விற்பனையை வழங்கியுள்ளன. இது எங்கள் தயாரிப்புகளின் பிரபலத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு வருடத்தில், 30 லட்சத்திற்கும் அதிகமான வருவாயை நாங்கள் அடைந்துள்ளோம்.
பிரதமர்: 30 லட்சம் ரூபாய்!
லட்சாதிபதி சகோதரி: எங்கள் விற்றுமுதல் 30 லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது. எங்கள் நிகர லாபம் 12 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளது ஐயா.
லட்சாதிபதி சகோதரி: பத்து பெண்கள் சேர்ந்து சானிட்டரி நாப்கின் கம்பெனி நடத்தி வருகிறார்கள் சார்.
பிரதம மந்திரி: லத்தூரிலிருந்து உங்கள் கிராமம் எவ்வளவு தொலைவில் உள்ளது?
லட்சாதிபதி சகோதரி: அது 20 கிலோமீட்டர் தூரம்தான் சார்.
பிரதமர்: 20 கிலோமீட்டர். நீங்கள் முதலில் தொடங்கியபோது எத்தனை பெண்கள் ஈடுபட்டனர்?
லட்சாதிபதி சகோதரி: ஆரம்பத்தில் நாங்கள் 10 பேர் இருந்தோம். யாரும் சேர தயாராக இல்லை, சானிட்டரி நாப்கின்களைப் பற்றி பேசக்கூட மக்கள் தயங்கினர்.
பிரதமர: உங்கள் தற்போதைய வருவாய் என்ன?
லட்சாதிபதி சகோதரி: 5 லட்ச ரூபாய்தான் புரள்வு சார்.
பிரதமர்: எப்படி இவ்வளவு சரளமாக ஹிந்தி பேச முடிகிறது?
லட்சாதிபதி சகோதரி: மற்றவர்களுடன் பேசுவதிலிருந்து இது இயல்பாக வருகிறது ஐயா.
பிரதமர்: உங்கள் தயாரிப்புகளை மகாராஷ்டிராவுக்கு வெளியே விற்கிறீர்களா?
லட்சாதிபதி சகோதரி: இல்லை, ஐயா, நாங்கள் தற்போது மகாராஷ்டிராவுக்குள் மட்டுமே செயல்படுகிறோம். பெண்கள் அதிகாரமளித்தல் திட்டத்துக்காகவும் எங்களுக்கு கிடைத்த வேலை வாய்ப்புகளுக்காகவும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஐயா. இதில் நீங்கள் முக்கிய பங்காற்றியுள்ளீர்கள்.
லட்சாதிபதி சகோதரி: நான் 2017 முதல் வங்கி சகியாக பணியாற்றி வருகிறேன்.
பிரதமர்: இப்போது நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?
லட்சாதிபதி சகோதரி: இப்போ 4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை சம்பாதிக்கிறேன் சார்.
லட்சாதிபதி சகோதரி: ஐயா, நேற்றைய ஒரு உதாரணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். பள்ளியில் என் மகளிடம் அம்மா எங்கே என்று கேட்டார்கள்.
பிரதம மந்திரி: அப்படியா?.
லட்சாதிபதி சகோதரி: சார், என் குழந்தை பெருமையுடன் சொன்னது, "மோடிஜியை சந்திக்க என் அம்மா மகாராஷ்டிரா சென்றுள்ளார்." இன்று இந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் சார்.
லட்சாதிபதி சகோதரி: 2023 ஆம் ஆண்டில், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டைக் கொண்டாடினோம். அப்போது சிறுதானியங்களில் பயிற்சி பெற்றோம் ஐயா. தற்போது சிறுதானிய உணவகம் நடத்தி வருகிறோம். எங்களைப் போல் 38 பெண்கள் வேலை செய்கிறோம்.
பிரதமர்: நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?
லட்சாதிபதி சகோதரி: ஐயா, எனது மொத்த ஆண்டு வருமானம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்.
லட்சாதிபதி சகோதரி: நான் பசு சகியாகவும், குஜராத்தின் என்.டி.டி.யில் சுகாதார ஊழியராகவும் பணிபுரிகிறேன். நானே ஒரு லட்சாதிபதி சகோதரி. என்னுடன் 88 பெண்கள் வேலை செய்கிறார்கள்.
லட்சாதிபதி சகோதரி: எனது குழுவின் பெயர் ஜெய் மாதா தி. நான் குழுவில் பசு சகியாகவும், பத்ரி கிராமத்தில் 500 விவசாயிகளுடனும் வேலை செய்கிறேன்.
பிரதமர்: 500ஆ?
லட்சாதிபதி சகோதரி: ஆம்.. 500 விவசாயிகளுடன்.
லட்சாதிபதி சகோதரி: இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்.
பிரதமர்: 1.50 லட்சமா?
லட்சாதிபதி சகோதரி: ஆமாம் ஐயா.
பிரதமர்: ஆஹா.
லட்சாதிபதி சகோதரி: ஐயா, எங்கள் சமூகத்தில், பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. என் வீட்டின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது ஐயா. ஆனால் குழுவில் சேர்ந்த பிறகு, பத்ரி கிராமத்தில் பசு சகி வேலை கிடைத்தது. இன்று நான் ஒரு லட்சாதிபதி சகோதரி சார்.
பிரதமர்: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
லட்சாதிபதி சகோதரி: மேகாலயாவைச் சேர்ந்தவர்.
பிரதமர்: மேகாலயா. உங்களுடன் எத்தனை சகோதரிகள் இருக்கிறார்கள்?
லட்சாதிபதி சகோதரி: குழுவில் நாங்கள் 10 பேர் இருக்கிறோம்.
பிரதமர்: பத்தா?
லட்சாதிபதி சகோதரி: ஆம், ஆனால் நாங்கள் சுய உதவிக் குழு மருந்தகத்தில் நிறைய வேலை செய்கிறோம். நான் சுய உதவிக் குழு மருந்தகத்தில் முதலீடு செய்துள்ளேன்.
லட்சாதிபதி சகோதரி: நாங்கள் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கு முன்பு, எங்களுக்கு பெயரோ அடையாளமோ இல்லை. சேர்ந்த பிறகு, எங்கள் கௌரவம் உயர்ந்தது. நாங்கள் விவசாய மருத்துவர்களாக மாறி கிருஷி சாகிகளாக பயிற்சி பெற்றோம்.
லட்சாதிபதி சகோதரி: இப்போது, நாங்கள் டாக்டர் சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறோம்.
பிரதமர்: எத்தனை விலங்குகளை நீங்கள் கவனித்துக் கொள்கிறீர்கள் ?
லட்சாதிபதி சகோதரி: சார், நம்ம பகுதி ரொம்ப பெரியது. நாங்கள் 20 பேர் அங்கு வேலை செய்கிறோம், அந்த பகுதியில் 470 லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கியுள்ளோம்.
பிரதமர்: 470?
லட்சாதிபதி சகோதரி:ஆம்.
பிரதமர்: ஆஹா, நீங்கள் அற்புதமான வேலை செய்துள்ளீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
லட்சாதிபதி சகோதரி: ஐயா, 2021 ஆம் ஆண்டில், 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க திட்டமிட்டீர்கள். அந்த முயற்சியின் கீழ், இச்சாவாரில் தற்சார்பு மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் நிறுவனத்தை நிறுவினோம். முதல் ஆண்டில், நாங்கள் 1,000 விவசாய சகோதரிகளை நிறுவனத்தில் சேர்த்தோம்.
பிரதமர்: 1,000?
லட்சாதிபதி சகோதரி: ஆமாம் சார்.
பிரதமர்: ஒரு வருடமா?
லட்சாதிபதி சகோதரி: ஆமாம் ஐயா.
லட்சாதிபதி சகோதரி: வணக்கம் ஐயா. என் பெயர் ரபியா பஷீர். நான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த நபர். நான் ஒரு பால் பண்ணை வணிகத்தை நடத்தி வருகிறேன். எனது தற்போதைய ஆண்டு வருமானம் ரூ .1.20 லட்சம். நானே ஒரு லட்சாதிபதி. 160 உறுப்பினர்களும் லட்சாதிபதிகளாக மாற நான் உதவியுள்ளேன்.
பிரதமர்: நீங்கள் எத்தனை விலங்குகளை பராமரிக்கிறீர்கள்?
லட்சாதிபதி சகோதரி: நாங்கள் தற்போது 10 விலங்குகளை பராமரித்து வருகிறோம்.
லட்சாதிபதி சகோதரி: ஜெய் ஜோஹர் சார். ஜெய் சத்தீஸ்கர்.
பிரதமர்: ஜெய் ஜோஹர்.
லட்சாதிபதி சகோதரி: ஐயா, எங்களிடம் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு) உள்ளது. இந்த திட்டம் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இதுவரை, கிசான் தீதிகள் என்று அழைக்கப்படும் 15,800 சகோதரிகள் எங்களுடன் இணைந்துள்ளனர். ஒவ்வொரு சகோதரிக்கும் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை கமிஷன் கிடைக்கும்.
பிரதமர்: உங்களுடன் எத்தனை சகோதரிகள் இருக்கிறார்கள்?
லட்சாதிபதி சகோதரி: தற்போது எங்களுடன் 100 முதல் 500 பெண்கள் உள்ளனர்.
பிரதமர்: சரி.
லட்சாதிபதி சகோதரி: நான் ஒரு ட்ரோன் சகோதரி..
பிரதமர்: எனவே கிராமத்தில் உள்ள அனைவரும் உங்களை ட்ரோன் பைலட் என்று அழைக்கிறார்களா?
லட்சாதிபதி சகோதரி: ஆம், எங்கள் மாவட்டத்தில் 3 ட்ரோன் பைலட்கள் உள்ளனர். அவர்களில் நானும் ஒருவர்.
லட்சாதிபதி சகோதரி: நான் 2019 முதல் ஜீவன் ஸ்வயம் சகாயதா சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். ஐயா, எங்களுடன் 1,500 பெண்கள் உள்ளனர்.
பிரதமர்: 1,500?
லட்சாதிபதி சகோதரி: ஆமாம் ஐயா. நான் மராத்தி பேசுகிறேன். எனக்கு ஹிந்தி அவ்வளவா பேச வராது சார்.
பிரதமர்: நீங்கள் மராத்தியில் பேசலாம்.
லட்சாதிபதி சகோதரி: என் வயலில் மஹுவா மரங்கள் உள்ளன. நான் மஹுவாவை விற்கும் ஒரு வணிகத்தை நடத்துகிறேன். மேலும் எனது குழுவில் உள்ள பெண்களிடமிருந்து மஹுவாவை வாங்குகிறேன். இரண்டே மாதங்களில் ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை சம்பாதித்துள்ளேன்.
பிரதமர்: இரண்டு லட்சம் ரூபாயா?
லட்சாதிபதி சகோதரி: ஆம்.
பிரதமர்: மொத்தம் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? ஐநூறு?
லட்சாதிபதி சகோதரி: 538
லட்சாதிபதி சகோதரி: சார், நான் மராத்தில பேசுறேன்.
பிரதமர்: சரி.. நல்லது.
லட்சாதிபதி சகோதரி: எனக்கு சுற்றுலா தொழில் உள்ளது. நான் இரண்டு சுற்றுலா படகுகளை வைத்திருக்கிறேன். சுற்றுலாப் பயணிகளை சவாரிகளுக்கு அழைத்துச் செல்கிறேன். கேரளா சென்று அவர்களின் சுற்றுலா வியாபாரத்தை பார்வையிட்டேன். இங்கு பெண்களாகிய நாங்களே இந்தத் தொழிலை நடத்துகிறோம். நான் கடந்த மூன்று ஆண்டுகளாக எனது சொந்த சுற்றுலா படகை இயக்கி வருகிறேன். அதிலிருந்து ஆண்டுக்கு 1 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்.
பிரதமர்: ஆஹா!
லட்சாதிபதி சகோதரி: இந்த தொழிலை விரிவுபடுத்த பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.
லட்சாதிபதி சகோதரி: நான் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவன், சலேகாசா பழங்குடியினர் பகுதியைச் சேர்ந்த நபர். நான் ஒரு பழங்குடியின பெண். நான் ஒரு இ-ரிக்ஷா வைத்துள்ளேன். அதை நானே ஓட்டுகிறேன். கிராமத்தில் பொருட்களை வாங்கவும் விற்கவும் இதைப் பயன்படுத்துகிறேன். மாதம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை லாபம் ஈட்டுவேன்.
பிரதமர்: உங்கள் அனைவரின் கருத்துக்களையும் கேட்ட பிறகு, நாட்டில் லட்சாதிபதி சகோதரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப் போகிறது என்று நான் உணர்கிறேன். மக்கள் உங்கள் வெற்றி நிகழ்வுகளைப் படிக்கும்போதும் கேட்கும்போதும், அவர்கள் உத்வேகம் பெறுவார்கள். உங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 1 கோடி சகோதரிகள் ஏற்கனவே லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர். மேலும் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளேன். எனவே, நீங்கள் இதை மற்றவர்களுக்கு புரிய வைக்க உதவ வேண்டும். நீங்கள் அதை செய்வீர்களா?
லட்சாதிபதி சகோதரி: செய்வோம் சார்.
பிரதமர்: உறுதியாக செய்வீர்களா?
லட்சாதிபதி சகோதரி: ஆம்.
பிரதமர்: நல்லது. நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் கலந்துரையாடலின் உத்தேசமான மொழிபெயர்ப்பு. பிரதமரின் கலந்துரையாடல் இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
****
PLM/KV
(Release ID: 2050026)
Visitor Counter : 45
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada