உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியும், முன்னேற்றமும் கொண்ட லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், யூனியன் பிரதேசத்தில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது

Posted On: 26 AUG 2024 1:15PM by PIB Chennai

வளர்ந்த மற்றும் முன்னேற்றம் கொண்ட லடாக்கை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவைப் பற்றி 'சமூக ஊடக எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்த முடிவின் மூலம், புதிய மாவட்டங்களான ஜான்ஸ்கர், திராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகியவை நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை தங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார். இந்த ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, இப்போது லடாக்கில் லே மற்றும் கார்கில் உட்பட மொத்தம் ஏழு மாவட்டங்கள் இருக்கும் என்று கூறியுள்ளார்.

லடாக் பரப்பளவின் அடிப்படையில் மிகப் பெரிய யூனியன் பிரதேசமாகும். தற்போது, லடாக்கில் லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இது இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். மிகவும் கடினமானதாகவும், அணுக முடியாததாகவும் இருப்பதால், தற்போது மாவட்ட நிர்வாகம் அடிமட்ட அளவில் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கிறது. இந்தப் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, இப்போது மத்திய அரசு மற்றும் லடாக் நிர்வாகத்தின் அனைத்து பொது நலத் திட்டங்களும் மக்களை எளிதாக அடைய முடியும், மேலும் அதிகமான மக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உள்துறை அமைச்சகத்தின் இந்த முக்கியமான முடிவு லடாக்கின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு "கொள்கை அளவிலான ஒப்புதல்" வழங்குவதோடு, புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான தலைமையகம், எல்லைகள், கட்டமைப்பு, பதவிகளை உருவாக்குதல், மாவட்ட உருவாக்கம் தொடர்பான வேறு எந்த அம்சத்தையும் மதிப்பீடு செய்ய ஒரு குழுவை அமைக்குமாறு லடாக் நிர்வாகத்தை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்ற பிறகு, லடாக் யூனியன் பிரதேசம் இந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான இறுதி முன்மொழிவை மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும்.

லடாக் மக்களுக்கு மகத்தான வாய்ப்புகளை உருவாக்க மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

*****

(Release ID: 2048877)

PKV/KPG/KR


(Release ID: 2048886) Visitor Counter : 62