பிரதமர் அலுவலகம்
ஒத்துழைப்பு மற்றும் நட்புக்கான பாரதத்தின் சுகாதார முன்முயற்சி (BHISHM) க்யூப்களை உக்ரைனுக்கு பரிசளித்தார் பிரதமர்
Posted On:
23 AUG 2024 6:33PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, உக்ரைன் அரசுக்கு, ஒத்துழைப்பு மற்றும் நட்புக்கான பாரதத்தின் சுகாதார முன்முயற்சிக்கான (BHISHM) நான்கு க்யூப்களை இன்று (23.08.2024) வழங்கினார். மனிதாபிமான உதவிக்காக பிரதமருக்கு உக்ரைன் அதிபர் திரு விளாடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். இந்த க்யூப்கள், காயமடைந்தவர்களுக்கு விரைவான சிகிச்சையளிக்கவும், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றவும் உதவும்.
ஒவ்வொரு BHISHM க்யூபும், அனைத்து வகையான காயங்கள் மற்றும் மருத்துவ சூழ்நிலைகளுக்கான முதல் வரிசை பராமரிப்புக்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு 10-15 அடிப்படை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களும் இதில் அடங்கும். அவசர சிகிச்சை, ரத்தப்போக்கு, தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் போன்ற அவசரகால சூழ்நிலைகளில் பல்வேறு வகையான சுமார் 200 நிகழ்வுகளைக் கையாளும் திறன் க்யூப்கள் உள்ளன. இது தனது சொந்த சக்தியையும், ஆக்ஸிஜனையும் குறைந்த அளவில் உருவாக்க முடியும். க்யூபை இயக்க உக்ரைன் தரப்புக்கு ஆரம்ப பயிற்சி அளிக்க இந்தியாவில் இருந்து நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.
***
MM/AG/DL
(Release ID: 2048277)
Visitor Counter : 62
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam