பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோலாப்பூர் நினைவிடத்தை பிரதமர் பார்வையிட்டார்

प्रविष्टि तिथि: 21 AUG 2024 11:56PM by PIB Chennai

வார்சாவில் உள்ள கோலாப்பூர் நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இரண்டாம் உலகப் போரின் போது போலந்து மக்களுக்கு வழங்கப்பட்ட கோலாப்பூர் சுதேச மாநிலத்தின் தாராள மனப்பான்மைக்கு இந்த நினைவுச்சின்னம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோலாப்பூரின் வலிவாடேயில் நிறுவப்பட்ட முகாம், போரின் போது போலந்து மக்களுக்கு தங்குவதற்கு இடம் அளித்தது. இந்தக் குடியேற்றத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 5,000 போலந்து அகதிகள் தங்கவைக்கப்பட்டனர். கோலாப்பூர் முகாமில் வசித்திருந்த  போலந்து மக்களையும் அவர்களது வாரிசுகளையும்  நினைவிடத்தில் பிரதமர் சந்தித்தார்.

 

இந்த நினைவிடத்திற்கு பிரதமர் வருகை தந்திருப்பது, இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையே உள்ள சிறப்பான வரலாற்று தொடர்பையும், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதையும் எடுத்துரைக்கிறது.

BR/KR

***

 


(रिलीज़ आईडी: 2047526) आगंतुक पटल : 77
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam