பிரதமர் அலுவலகம்
மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை
प्रविष्टि तिथि:
19 AUG 2024 2:02PM by PIB Chennai
மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்தநாளையொட்டி, அவருக்கு இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். திரிபுராவின் வளர்ச்சியில் மகாராஜாவின் மறக்க முடியாத பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார். திரிபுராவின் முன்னேற்றத்திற்கான மகாராஜாவின் தொலைநோக்கு சிந்தனைகளை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் திரு மோடி உறுதி அளித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“தலை சிறந்த மாமன்னர் பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூரின் பிறந்தநாளையொட்டி நான் அவருக்கு மரியாதை செலுத்தினேன். திரிபுராவின் வளர்ச்சியில் அவர் மறக்க முடியாத பங்களிப்பை வழங்கியுள்ளார். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிப்பதற்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். பழங்குடியின சமுதாயத்தினரின் நலனுக்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், பெரிதும் போற்றப்படுகின்றன. திரிபுராவின் முன்னேற்றத்திற்கான அவரது தொலைநோக்கு சிந்தனைகளை நிறைவேற்ற எங்களது அரசு உறுதிபூண்டுள்ளது”.
***
(Release ID: 2046558)
MM/RR
(रिलीज़ आईडी: 2046566)
आगंतुक पटल : 110
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam