குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 19 AUG 2024 11:21AM by PIB Chennai

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக 'எக்ஸ்' பதிவில், குடியரசு துணைத் தலைவர் கூறியிருப்பதாவது:

 

"ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி மகிழ்ச்சியான நல்வாழ்த்துகள். இந்நாள், சகோதர - சகோதரிகளுக்கிடையேயான புனிதமான பிணைப்பின் கொண்டாட்டம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும் போற்றுவதற்குமான அர்ப்பணிப்பைக் குறிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும்.

 

இந்த புனிதமான சந்தர்ப்பத்தில், பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் நிலைநிறுத்தவும், அவர்கள் செழித்து வளரவும், அவர்களின் திறனை முழுமையாக உணரவும் ஒரு சூழலை வளர்ப்பதற்கு நாம் உறுதியேற்போம்.

 

***

(Release ID: 2046498)
MM/RR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2046508) வருகையாளர் எண்ணிக்கை : 100
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Kannada