பிரதமர் அலுவலகம்
இந்தியாவில் ராம்சார் தலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்
प्रविष्टि तिथि:
14 AUG 2024 9:47PM by PIB Chennai
இந்தியாவில் ராம்சார் தலங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ராம்சார் ஒப்பந்தத்தின்படி மூன்று இடங்கள் சேர்க்கப்பட்டதற்காக தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேச மக்களுக்கு அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்த பிரதமர் கூறியிருப்பதாவது;
"நமது ராம்சார் தளங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இந்தியாவுக்கு ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம், இது நிலையான வளர்ச்சிக்கும் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கும் நாம் கொடுக்கும் முன்னுரிமையைக் குறிக்கிறது. ம.பி., தமிழக மக்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.
வரும் காலங்களில் இதுபோன்ற முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து முன்னணியில் இருப்போம்"
**************
PKV/KV
(रिलीज़ आईडी: 2046313)
आगंतुक पटल : 76
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada