பிரதமர் அலுவலகம்

நாட்டின் 78-வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

Posted On: 15 AUG 2024 9:20PM by PIB Chennai

பூடான் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:

"சுதந்திர தின வாழ்த்துக்களுக்கு நன்றி, பிரதமர் ஷெரிங் டோப்கே."

நேபாள பிரதமரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:

"சுதந்திர தின வாழ்த்துக்களுக்கு நன்றி, பிரதமர் கே பி சர்மா ஒலி. இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான வலுவான பிணைப்பு குறித்து உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன்’’.

மாலத்தீவு அதிபரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியிருப்பதாவது;

"நமது சுதந்திர தின வாழ்த்துக்களுக்கு அதிபர் முகமது முய்ஸு அவர்களுக்கு நன்றி. இந்தியா மாலத்தீவை ஒரு மதிப்புமிக்க நண்பராக கருதுகிறது, நமது  நாடுகளும் நமது  மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படும்’’.

பிரான்ஸ் அதிபரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியிருப்பதாவது;
"சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த எனது நல்ல நண்பர், அதிபர்  இம்மானுவேல் மக்ரோனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இந்தியப் பயணம் மட்டுமின்றி, நமது பல்வேறு கலந்துரையாடல்களையும் நான் அன்புடன் நினைவு கூர்கிறேன், அவை இந்தியா – பிரான்ஸ் கூட்டாண்மைக்கு பெரும் பலத்தை அளித்துள்ளன. உலகளாவிய நன்மைக்காக நாங்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம்" 
.
மொரீஷியஸ் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர்  கூறியிருப்பதாவது;
"சுதந்திர தின வாழ்த்துகளுக்கு பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்துக்கு நன்றி. இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு தொடர்ந்து வளர்ந்து, பன்முகத்தன்மை கொண்டதாக மாறட்டும்" 
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் பதிவுக்கு பதிலளித்த திரு மோடி எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டார்:
"உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி @HHShkMohd. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான வலுவான உறவுகளுக்கான உங்கள் தனிப்பட்ட அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. பல ஆண்டுகளாக பேணி வளர்க்கப்பட்ட நட்புறவின் பிணைப்பை நமது நாடுகள் தொடர்ந்து உறுதிப்படுத்தும்" 

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுதந்திர தின வாழ்த்துக்களுக்கு பதிலளித்த திரு மோடி தனது பதிவில் கூறியிருப்பதாவது:

"உங்கள் சுதந்திர தின வாழ்த்துகளுக்கு நன்றி, பிரதமர் @GiorgiaMeloni. இந்தியா-இத்தாலி நட்புறவு தொடர்ந்து வளர்ந்து, சிறந்த கிரகத்தை உருவாக்க பங்களிக்கட்டும்" 

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். 

டாக்டர் அலிக்கு பதிலளித்த திரு மோடி எக்ஸ் தளத்தில்  பதிவிட்டதாவது:
 
"மேதகு @presidentaligy அவர்களே, உங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. எமது மக்களுக்கிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்த உங்களுடன் இணைந்து செயல்படுவதை எதிர்பார்த்துள்ளோம்"
 

*************************

PKV/KV
 



(Release ID: 2046312) Visitor Counter : 8