பிரதமர் அலுவலகம்
எஸ்எஸ்எல்வி-டி3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
Posted On:
16 AUG 2024 1:48PM by PIB Chennai
புதிய செயற்கைக்கோள் செலுத்துவாகனம் (எஸ்எஸ்எல்வி)-டி3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆய்வுக்கழக (இஸ்ரோ) விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குறைந்த செலவிலான எஸ்எஸ்எல்வி, விண்வெளி ஆய்வுப்பணிகளில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, தனியார் தொழில்துறையினரையும் ஊக்குவிக்கும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்! இந்த சாதனையைப் புரிந்த நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்துறையினருக்கு வாழ்த்துகள். இந்தியா தற்போது புதிய செலுத்து வாகனத்தை உருவாக்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. குறைந்த செலவிலான எஸ்எஸ்எல்வி, விண்வெளி ஆய்வுப்பணிகளில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, தனியார் தொழில்துறையினரையும் ஊக்குவிக்கும். @இஸ்ரோ, @இன்ஸ்பேஸ்இந்த், @என்எஸ்ஐஎல்_ மற்றும் ஒட்டுமொத்த விண்வெளித் துறையினருக்கும் எனது நல்வாழ்த்துகள்.”
***
(Release ID: 2045898)
MM/AG/RR
(Release ID: 2045910)
Visitor Counter : 95
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam