பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

விமானப்படை முதல் அதற்கு அப்பால் வரை ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர், இணையற்ற சிறப்பை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் சாதனைகள் பெண் சக்தியின் வலிமை மற்றும் உணர்வுக்கு சான்றாகும்: பிரதமர்

Posted On: 15 AUG 2024 12:35PM by PIB Chennai

2024 ஆகஸ்ட் 15 அன்று புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டை வழிநடத்தினார். விழாவின் போது, அவர் தேசியக் கொடியை ஏற்றி, இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

நாடு முழுவதிலும் இருந்து களப்பணியாளர்கள் செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டத்தை கொண்டாடினர்

பிரதமர் தமது உரையில், விமானப்படை முதல் அதற்கு அப்பால் வரை ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர், இணையற்ற சிறப்பை வெளிப்படுத்துகின்றனர் என்று கூறினார். அவர்களின் சாதனைகள், பெண் சக்தியின் வலிமைக்கும், உணர்வுக்கும் சான்றாகும். நாம் முன்னோக்கி நகரும்போது, நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை தொடர்ந்து ஆதரிப்போம், கொண்டாடுவோம்  என்று அவர் தெரிவித்தார்.

பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். நாங்கள் பெண்களை மதிப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்காக முக்கியமான முடிவுகளையும் எடுக்கிறோம். ஒரு தாயின் குழந்தையை தரமாக  வளர்ப்பதற்கு அரசு தடையாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். கடந்த 10 ஆண்டுகளில், 10 கோடி பெண்கள் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்து, பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார். பெண்கள் நிதி சுதந்திரத்தை அடையும்போது, அவர்கள்  முடிவெடுப்பதில் செயலில் பங்கேற்பாளர்களாக மாறுகிறார்கள், இது சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. இதுவரை நாடு முழுவதும் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.9 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி பேசுகையில், சுதந்திர தினத்தின் இந்த முக்கியமான தருணத்தில், நமது நாட்டின் சுதந்திரத்தை மட்டுமல்ல, நமது முன்னேற்றத்தை இயக்கும் பெண்களின் நம்பமுடியாத பங்களிப்புகளையும் நாம் மதிக்கிறோம் என்று கூறினார். அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வும், மன உறுதியும் பெண் சக்தியின் சாராம்சமாகும். நாட்டின்  வளர்ச்சிக்காக நாம் பாடுபடும் அதே வேளையில், நமது எதிர்காலத்தை வடிவமைப்பதிலும், நமது சமூகத்தை முன்னேற்றுவதிலும் பெண்களின் முக்கிய பங்கை அங்கீகரித்து, பெண்களுக்கு அதிகாரம் அளித்து மேம்படுத்துவோம் என அவர் கூறினார்.

இந்த ஆண்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்  செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 161 பயனாளிகள் மற்றும் அவர்களின் தோழர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்துள்ளது. இந்தச் சிறப்பு விருந்தினர்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் பல்வேறு அதிகாரமளித்தல் மற்றும் நலத்திட்டங்களைச் சேர்ந்த அர்ப்பணிப்புள்ள பெண் தொழிலாளர்கள் அடங்குவர். இந்த குழுவில் அங்கன்வாடி தொழிலாளர்கள், ஒன்-ஸ்டாப் சென்டர்கள் (.எஸ்.சி), பெண்கள் அதிகாரமளிப்பதற்கான சங்கல்ப் மையங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் (டி.சி.பி.யு) ஆகியவற்றின் ஊழியர்கள் அடங்குவர்.

புதுதில்லிக்கு அவர்கள் மேற்கொண்ட பயணத்தில் நாடாளுமன்றம், பிரதமர்  சங்ராலயா போன்ற அடையாளச் சின்னங்கள் பற்றிய சுற்றுப்பயணங்கள் இடம்பெற்றன. 2024 ஆகஸ்ட் 14 அன்று விஞ்ஞான் பவனில் தேநீர் விருந்து, இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட  நிகழ்ச்சிகளில்  அவர்கள் கலந்தநு கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அவர்களின் தோழர்கள் ஆகஸ்ட் 13 முதல் 16, 2024 வரை புதுடெல்லியில் இருப்பார்கள். 78 வது சுதந்திர தின விழா இந்தியாவின் சுதந்திரத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்கு அயராது பங்களிக்கும் நபர்களுக்கு மரியாதை  செலுத்துவதும்  இதில் அடங்கும். கூட்டு சாதனைகளை கௌரவிப்பதற்கும், நம்பிக்கை மற்றும் செழிப்பு நிறைந்த எதிர்காலத்தை எதிர்நோக்குவதற்கும் இது பயன்படும்.

*****

PKV/ KV

 

 



(Release ID: 2045583) Visitor Counter : 20