பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 AUG 2024 11:43AM by PIB Chennai
பிரபல தத்துவ ஞானியும், சிந்தனையாளரும், ஆன்மீக தலைவருமான ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ அரவிந்தரின் நீடித்த பாரம்பரியம் மற்றும் இந்தியாவின் தேசிய எழுச்சிக்கான அவரது ஆழமான தாக்கத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
“ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் தத்துவ ஞானியாகவும், சிந்தனையாளராகவும், ஆன்மீக தலைவராகவும் போற்றப்படுகிறார். தேசிய எழுச்சிக்கான அவரது பேச்சுக்கள், பல தலைமுறையினரையும் ஈர்ப்பதாக உள்ளது. அவர் கனவு கண்ட இந்தியாவை படைக்க நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
***
MM/RJ/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2045542)
வருகையாளர் எண்ணிக்கை : 123
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam