உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அகமதாபாத்தில் 'மூவண்ணக்கொடி யாத்திரையைத்' தொடங்கிவைத்தார்
Posted On:
13 AUG 2024 8:20PM by PIB Chennai
அகமதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மூவண்ணக்கொடி யாத்திரையை’ மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல் உட்பட பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிய இல்லந்தோறும்மூவண்ணக் கொடி பிரச்சாரம், தேசபக்தி மற்றும் 2047 க்குள் வளர்ந்த பாரத்தை உருவாக்குவதற்கான தீர்மானத்தின் வெளிப்பாடாக மாறியுள்ளது என்று கூறினார். இந்த இயக்கம் குஜராத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதிலும் புதிய சக்தியை அளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நாம் சுதந்திரத்தின் 78-வது ஆண்டில் நுழையவிருக்கும் தருணத்தில், குஜராத்தில் மூவண்ணக் கொடி இல்லாமல் எந்த வீடும் அலுவலகமும் இருக்கக்கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார். குஜராத் முழுவதும் மூவண்ணக் கொடியை அலங்கரிக்கும் வகையில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் குஜராத் மற்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் தேசபக்தி உணர்வு குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.
'விடுதலையின் அமிர்தப் பெருவிழா' பிரச்சாரத்திற்குப் பிறகு, 'அமிர்தக் காலத்தில்' நாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதற்கான தீர்மானத்தை நினைவூட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ' இல்லந்தோறும் மூவண்ணக் கொடி' பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று கூறிய அமைச்சர், நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நாம் அஞ்சலி செலுத்துகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2044996
*****************
BR/KV
(Release ID: 2045070)
Visitor Counter : 56
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada