பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலக சிங்கங்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

Posted On: 10 AUG 2024 9:03AM by PIB Chennai

உலக சிங்கங்கள் தினத்தை முன்னிட்டு சிங்க பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 2024 பிப்ரவரியில் சர்வதேச பெரிய பூனை கூட்டமைப்பை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கூட்டமைப்பு கம்பீரமான பெரிய பூனை வகை விலங்குகளைப் பாதுகாப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து கிடைத்த உற்சாகமான வரவேற்புக் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களும் கிர் தேசிய பூங்காவைப் பார்வையிடவும், குஜராத் மக்களின் விருந்தோம்பலை அனுபவிக்கவும், சிங்கத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் காணவும் பிரதமர் திரு நரேத்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"உலக சிங்கவங்கள் தினத்தில், சிங்க பாதுகாப்புத் தொடர்பாக பணிபுரியும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். மேலும் இந்த கம்பீரமான பெரிய பூனை வகை விலங்குகளைப் பாதுகாப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் குறிப்பிடுகிறேன். இந்தியாவில் குஜராத்தின் கிர் பகுதி அதிக சிங்கங்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பல ஆண்டுகளாக, இங்கு சிங்கங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி."

"இந்த ஆண்டு பிப்ரவரியில், பெரிய பூனை வகை விலங்குகள் வசிக்கும் உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்க சர்வதேச பெரிய பூனை கூட்டமைப்பை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையை உருவாக்க முற்படும் முயற்சியாகும். மேலும் இது தொடர்பான சமூக முயற்சிகளுக்கு இந்த கூட்டமைப்பு ஆதரவளிக்கிறது. இந்த முயற்சிக்கு உலகளவில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது".

"கம்பீரமான ஆசிய சிங்கத்தைக் காண அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களையும் கிர் பகுதிக்கு அழைக்கிறேன். சிங்கத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைக் காணவும், அதே நேரத்தில் குஜராத் மக்களின் விருந்தோம்பலை அனுபவிக்கவும் இது அனைவருக்கும் வாய்ப்காக அமையும்."

****

PLM/DL



(Release ID: 2044046) Visitor Counter : 39