பிரதமர் அலுவலகம்
மைதாம்கள் உலக பாரம்பரிய பட்டியலில் இணைந்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
26 JUL 2024 2:50PM by PIB Chennai
அசாமின், சராய்தேவ் மைதாம், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில் இடம்பெற்றது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி, மகிழ்ச்சியும், பெருமிதமும் தெரிவித்துள்ளார். இது இந்தியாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கக் கூடியது என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.
முன்னோர்களின் நினைவிடமான சராய்தேவ் மைதாம்கள், ஆஹோம் கலாச்சாரத்தின் சிறப்புகளை வெளிப்படுத்துவதாகவும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்டுள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்கள் பட்டியல் குறித்த, யுனெஸ்கோவின் எக்ஸ் தள பதிவிற்கு பதில் அளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;
“இந்தியாவிற்கு மிகுந்த மிகழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கக்கூடியது இது!
முன்னோர்களின் நினைவிடமான சராய்தேவ் மைதாம்கள், ஆஹோம் கலாச்சாரத்தின் சிறப்புகளை வெளிப்படுத்துகின்றன. தலைசிறந்த ஆஹோம் ஆட்சிமுறை மற்றும் கலாச்சாரம் குறித்து மேலும் பல மக்கள் அறிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
மைதாம்கள் #WorldHeritage List-ல் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது”.
--------------
MM/RS/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2037609)
வருகையாளர் எண்ணிக்கை : 66
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam