பிரதமர் அலுவலகம்
25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ஜூலை 26 அன்று பிரதமர் கார்கில் பயணம் மேற்கொள்கிறார்
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஷின்குன் லா சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் தொடங்கிவைப்பார்
प्रविष्टि तिथि:
25 JUL 2024 10:28AM by PIB Chennai
25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, வரும் 26-ம் தேதி (நாளை) காலை 9.20 மணியளவில் கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்று கடமையின் போது மிக உயரிய தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார். ஷின்குன் லா சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் மெய்நிகர் வடிவில் தொடங்கிவைப்பார்.
ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம் 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டை-குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது, இது லே-க்கு அனைத்து பருவ காலத்திலும் இணைப்பை வழங்குவதற்காக நிமு – படும் - தர்ச்சா சாலையில் சுமார் 15,800 அடி உயரத்தில் கட்டப்படும். இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டால், இது உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும். ஷின்குன் லா சுரங்கப்பாதை நமது ஆயுதப் படைகள் மற்றும் தளவாடங்களின் விரைவான போக்குவரத்தை உறுதி செய்வதுடன் மட்டுமல்லாமல், லடாக்கில் பொருளாதார, சமூக வளர்ச்சியையும் வளர்க்கும்.
***
(Release ID: 2036644)
PKV/KPG/KR
(रिलीज़ आईडी: 2036664)
आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Kannada
,
हिन्दी
,
Hindi_MP
,
Punjabi
,
Malayalam
,
Assamese
,
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
Manipuri
,
Gujarati
,
Telugu