நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பட்ஜெட் 2024-25- சிறப்பம்சங்கள்

Posted On: 23 JUL 2024 1:17PM by PIB Chennai

2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

இந்தப் பட்ஜெட்டில்  இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

பகுதி-

பட்ஜெட் மதிப்பீடுகள் 2024-25

  • கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடி
  • மொத்த செலவினத் தொகை ரூ.48.21 லட்சம் கோடி
  • நிகர வரிவருவாய் ரூ.25.83 லட்சம் கோடி
  • நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9%
  • நிதிப் பற்றாக்குறையை  அடுத்த ஆண்டில் 4.5 சதவீதத்திற்கும் குறைவான நிலையை எட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • பணவீக்க விகிதம் குறைந்த அளவில் தொடரவும்  4 சதவீதம் என்ற இலக்கை அடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உணவு மற்றும் எரிபொருள் அல்லாத முக்கியப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் 3.1 சதவீதமாக இருக்கும்.
  • பட்ஜெட் வேலைவாய்ப்பு , திறன் மேம்பாடு, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த மக்களைக்  கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான பிரதமரின் 5 அம்ச தொகுப்புத் திட்டம்

  • அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, பிற வாய்ப்புகளைப் பெறுவதற்கான பிரதமரின் 5 அம்ச தொகுப்புத் திட்டம்  உருவாக்கப்பட்டுள்ளது.
  1. திட்டம்   முதல் முறை தொழிலாளர்கள்:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில்  முதல் முறையாக சந்தாதாரர்களாக  பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பளத் தொகையான 15,000 ரூபாய் 3 தவணைகளாக வழங்கப்படும்.

  1. திட்டம் பி உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் :

பணியில் சேர்ந்த முதல் 4 ஆண்டுகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் செலுத்தப்படும் தொழிலாளர் மற்றும் தொழில் வழங்குநர் சந்தா தொகைக்கான ஊக்கத்தொகை நேரடியாக வழங்கப்படும்.

  1. திட்டம் சி தொழில் வழங்குநருக்கான ஆதரவு:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஒவ்வொரு கூடுதல் தொழிலாளிக்கும் சந்தாத் தொகை செலுத்தும் தொழில் வழங்குநருக்கு மாதந்தோறும் 3,000 ரூபாயை 2 ஆண்டுக் காலத்திற்கு அரசு திருப்பி அளிக்கும்.

  1. திட்டம் டி மத்திய அரசின் உதவியுடன் கூடிய புதிய திறன் மேம்பாட்டுத் திட்டம்:
  • அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
  • இதற்கென 1,000 தொழிற்பயிற்சி நிறுவனங்கள் திறன் மேம்பாட்டு மையங்களாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள்.
  1. திட்டம்    முன்னணியில் உள்ள 500 நிறுவனங்களில் தொழில் பழகுநருக்கான புதிய திட்டம்:
  • அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தொழில் பழகுநருக்கான பயிற்சி வழங்கப்படும்.

மத்திய பட்ஜெட்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான 9 அம்சங்களுக்கான முன்னுரிமைகள்:

  1. வேளாண் துறையில் உற்பத்தி மற்றும் நெகிழ்வுத் தன்மை
  2. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு
  3. மனிதவள மேம்பாட்டுடன் கூடிய சமூக நீதி
  4. உற்பத்தி மற்றும் சேவைத் துறை
  5. நகர்ப்புற மேம்பாடு
  6. எரிசக்தி பாதுகாப்பு
  7. உள்கட்டமைப்பு வசதிகள்
  8. புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
  9. அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள்

முன்னுரிமை 1 – வேளாண் துறையில் உற்பத்தி மற்றும் நெகிழ்வுத்தன்மை

  • வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
  • விவசாயிகள் சாகுபடி செய்வதற்கு  ஏற்ப பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளர்ந்து அதிக மகசூல் அளிக்கக்கூடிய, 109 புதிய பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் 32 ரகங்களில் வெளியிடப்படும்.
  • நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியுடன் முத்திரை மற்றும் சான்றிதழ்  வழங்கப்படும்.

 

  • இயற்கை வேளாண்மைக்கான 10,000 உயிரி இடுபொருள் ஆதார மையங்கள் தேவையின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும்.
  • விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகள் அடுத்த 3 ஆண்டுகளில் விவசாயிகள் மற்றும் அவர்களது வேளாண் நிலங்களை உள்ளடக்கிய வகையில் செயல்படுத்தப்படும்

முன்னுரிமை 2 – வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு

  • பிரதமரின் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைக்கான 3 திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

திட்டம் முதல் முறை தொழிலாளர்கள்

திட்டம பி - உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம்

திட்டம் சிவேலைவாய்ப்பு வழங்குநருக்கான ஆதரவு

  • பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள்
  • பணி புரியும் மகளிருக்கான விடுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் குழந்தைகள் காப்பக வசதியை ஏற்படுத்துதல்
  • பெண்களுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்தல்.
  • மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு சந்தைப்படுத்துதலுக்கான வாய்ப்புகளை ஊக்குவித்தல்
  • திறன் மேம்பாடு
  • அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பிரதமரின் புதிய தொகுப்புத் திட்டம்.
  • திறன் மேம்பாட்டிற்கான மாதிரி கடனுதவித் திட்டத்தின் கீழ் 7,50,000 ரூபாய் அளவிற்கு கடனுதவி பெறும் வகையில், திருத்தியமைத்தல்.
  • மாநில அரசின் பிற கல்விக்கடனுக்கான திட்டங்களில் தகுதி பெறாத இளைஞர்களுக்கு உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்வதற்கான 10 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

முன்னுரிமை 3 – மனிதவள மேம்பாட்டைஉள்ளடக்கிய சமூக நீதி

பூர்வோதயா திட்டம்

  • அமிர்தசரஸ், கொல்கத்தா, தொழில் வழித்தடத்துடன் கயாவில்  புதிய தொழில் வழித்தடப்பாதை மேம்படுத்தப்படும்.
  • பீகார் மாநிலம் பிர்பெயின்தியில் 2,400 மெகாவாட் புதிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பது உட்பட பல்வேறு மின் உற்பத்தித் திட்டங்கள் 21,400 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்தப்படும்.

ஆந்திரப்பிரதேச மாநில மறுசீரமைப்புச் சட்டம்

  • நடப்பு நிதியாண்டில் பன்முக மேம்பாட்டு முகமையின் மூலம் 15,000 கோடி ரூபாய் அளவிற்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படும்.
  • விசாகப்பட்டினம் சென்னை தொழில் வழித்தடத்தில் கொப்பார்த்தியில் தொழில் வழித்தடப் பாதையும், ஐதராபாத்- பெங்களூரு தொழில் வழித்தடத்தில் ஓர்வக்கால் பகுதியில் வழித்தடப்பாதை ஒன்றும் ஏற்படுத்தப்படும்.

பெண்கள் தலைமையிலான மேம்பாட்டுத் திட்டங்கள்

  • பெண்கள் மற்றும் சிறுமிகள் பயனடையும் வகையில், 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலான மொத்த நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய திட்டங்கள்.

பிரதமரின் பழங்குடியினருக்கான உன்னத கிராமத்திட்டம்

  • பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய கிராமங்களில் பழங்குடியின மக்களுக்கான சமூகப் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் 63,000 கிராமங்களில் வசிக்கும் 5 கோடி பழங்குடியின மக்கள் பயன் அடையக் கூடிய வகையிலான திட்டங்கள்.

வடகிழக்கு மாநிலங்களில்  வங்கிக் கிளைகள் அமைத்தல்

  • வடகிழக்கு மாநிலங்களில் இந்திய அஞ்சலக வங்கியின் 100 கிளைகள் ஏற்படுத்தப்படும்.

முன்னுரிமை 4 – உற்பத்தி மற்றும் சேவைத்துறை

உற்பத்தித் துறையில் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான  கடன் உத்தரவாதத் திட்டம்.

  • குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான காலவரையறையுடன் கூடிய கடன்களுக்கு பிணை அல்லது 3-வது நபர் உத்தரவாதம் இல்லாத கடன் உத்தரவாதத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இடர்பாடான காலங்களில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் ஆதரவு திட்டம்.

  • குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கலான தருணங்களில் வங்கிக் கடனுதவிகளைத் தொடர்ந்து பெறக் கூடிய வகையிலான புதிய நடைமுறை உருவாக்கப்படும்.

முத்ரா கடன்கள்

  • ஏற்கனவே முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று முறையாக திருப்பிச் செலுத்தியவர்களுக்குதருண்என்ற பிரிவின் கீழ் வழங்கப்படும் முத்ரா கடன் தொகைக்கான உச்சவரம்பு 10 லட்சம்  ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.

மேம்படுத்தப்பட்ட வாய்ப்புகளுக்கான கட்டாய நடமுறைகளுடன் கூடிய வர்த்தக வருவாய்க்கான தள்ளுபடி விதிமுறைகள்

  • கட்டாய வர்த்தக வருவாயின தள்ளுபடிக்கான நடைமுறைகளுடன் கூடிய விற்பனைத் தொகைக்கான  உச்சவரம்பு  500 கோடி ரூபாயிலிருந்து 250  கோடி ரூபாயாகக் குறைக்கப்படும்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத உணவு, தரநிலை மற்றும் பரிசோதனைக்கான அலகுகள்

  • குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினருக்காக நிதி ஆதரவுடன் கூடிய உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத  50 பன்முக உணவுப் பொருள்களுக்கான பரிசோதனை மையங்கள்  

மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள்

  • பொதுத்துறைதனியார் கூட்டுப் பங்களிப்புடன் கூடிய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுகான மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்படுவதுடன்  சர்வதேச சந்தையில் பாரம்பரிய கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

முக்கியத்துவம் வாய்ந்த கனிமவள இயக்கம்

  • உள்நாட்டு உற்பத்தி, முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் மறுசுழற்சி மற்றும் முக்கிய கனிமவள சொத்துக்களை வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்வது போன்ற நடவடிக்கைகளுக்கான கனிமவள இயக்கம் உருவாக்கப்படும்.

கனிம சுரங்கங்கள்

  • கனிம சுரங்கங்களில் கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான  கட்டமைப்பு வசதிகளுக்கான முதல் ஏல நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

மின்னணு பொது உள்கட்டமைப்பு செயலிகள்

  • கடனுதவி, மின்னணு வர்த்தகம், கல்வி, சுகாதாரம், சட்டம் மற்றும் நீதி, சரக்குப் போக்குவரத்து. எம்எஸ்எம்விசேவை விநியோகம் மற்றும் நகர்ப்புற நிர்வாகம் போன்றவற்றில் மின்னணு பொது உள்கட்டமைப்புக்கான செயலிகளை மேம்படுத்துதல்.

முன்னுரிமை 5 – நகர்ப்புற மேம்பாடு

மாற்றங்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள்

  • 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 14 பெரிய நகரங்களில் மேம்பாட்டுக்கான திட்டங்கள் மற்றும் உத்திகளை வகுத்து அமல்படுத்துவதற்கான நிதியுதவி வழங்கப்படும்.

நகர்ப்புற வீட்டுவசதி

  • பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் 2.0-ன் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் 2.2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியுதவி உட்பட 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும்.

தெருவோரச் சந்தைகள்

  • அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில்  ஆண்டுதோறும் 100 வாராந்தர கண்காட்சிகள் அல்லது சாலையோர உணவு மையங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவு திரட்டப்படும். .

முன்னுரிமை 6 – எரிசக்திப் பாதுகாப்பு 

எரிசக்தி மாற்றம்

  • வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, நீடித்த சுற்றுச்சூழல் ஆகியவற்றில் சமநிலையில் பேணும் வகையில், எரிசக்தி மாற்றம் தொடர்பான வழிமுறைகளுக்கு கொள்கை ஆவணங்கள் உருவாக்கப்படும்.

மின்சக்தி சேமிப்புக் கொள்கை

  • மின்சக்தியை சேமிக்கும் வகையிலான கட்டமைப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள் உருவாக்கப்படும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கான சிறிய மற்றும் நவீன அணு உலை 

  • தனியார் - அரசு கூட்டுப் பங்களிப்புடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை  மேற்கொள்ள ஏதுவாக பாரத் சிறிய அளவிலான நவீன அணு உலை மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி உற்பத்தி நிலையங்களை உருவாக்குதல்.

அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அனல் மின் நிலையம்

  • தேசிய அனல்மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் பாரத கனரக மின் உற்பத்தி நிறுவனம் இடையே 800 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடன் கூடிய வர்த்தக ரீதியிலான உற்பத்தி நிலையத்தை அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாட்டுடன்   அமைப்பதற்கான கூட்டுத்திட்டம்.  

தற்போதைய செயல் திறனைப் பாதிக்காத வகையில் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்

  • தொழிற்சாலைகளின் தற்போதைய செயல்திறன், சாதனைகள் மற்றும் வர்த்தக நிலையைப் பாதிக்காத வகையில் இந்திய கார்பன் சந்தை நிலைக்கான சரியான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக  இந்திய கார்பன் சந்தைக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வது.

முன்னுரிமை 7 – உள்கட்டமைப்பு வசதிகள்

உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான மத்திய அரசின் முதலீடுகள்

  • மூலதன செலவினங்களுக்காக 11,11,111 கோடி ரூபாய் (அதாவது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.4%) நிதியுதவி வழங்கப்படும்.

உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான மாநில அரசுகளின்  முதலீடுகள்

  • உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான முதலீடுகள் செய்வதற்கு ஆதரவளிக்கும் வகையில் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கான நீண்ட கால வட்டியில்லாக் கடன்கள் வழங்க வகை செய்யப்படும்.

பிரதமரின் கிராமப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டம்

  • பிரதமரின் கிராமப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  4-வது கட்டமாக அனைத்து பருவநிலைகளிலும் போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் 25,000 கிராமப்புறச் சாலைகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்படும்.

நீர்ப்பாசனம் மற்றும்  வெள்ள நிவாரணம்

  • பீகாரில் கோசிமெச்சி மாநில இணைப்புச் சாலை உட்பட பிற சாலைத்திட்டங்களுக்காக 11,500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
  • அசாம், இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட, சிக்கிம் மாநிலங்களில்  வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலான திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும்

சுற்றுலா

  • விஷ்ணுபாத் கோவில் வழித்தடம், மகாபோதி கோவில் வழித்தடம், ராஜ்கிர் ஆகியவற்றுக்கான விரிவான மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • ஒடிசாவில் கோவில்கள், நினைவுச் சின்னங்கள், கலை வண்ணங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், இயற்கைச் சமவெளிகள், கடற்கரையை அழகுப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

முன்னுரிமை 8 – புதிய கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

  • அடிப்படை ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் மாதிரி வடிவமைப்பு மேம்பாட்டிற்காக அணுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிதியம் செயல்படுத்தப்படும்.
  • வர்த்தக ரீதியில் தனியார் பங்களிப்புடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புப் பணிகளுக்காக ஒரு லட்சம் ரூபாயில் நிதித் தொகுப்பு உருவாக்கப்படும்.

விண்வெளிப் பொருளாதாரம்

  • விண்வெளிப் பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 5 மடங்கு விரிவாக்கம் செய்யும் வகையில் ஆயிரம் கோடி ரூபாயில் கூட்டுத் தொழில் மூலதன நிதியம் உருவாக்கப்படும்.

முன்னுரிமை 9 –  அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்த நடவடிக்கைகள்

கிராமப்புற நிலங்கள் தொடர்பான நடவடிக்கைகள்

  • அனைத்து வகையான நிலங்களுக்கும் புவி ஆதார் அல்லது தனித்துவ நிலத் தொகுப்பு அடையாள எண் வழங்கப்படும்.
  • நில அளவீடு சார்ந்த வரைபடங்களை மின்மயமாக்குதல்
  • தற்போதைய நில உரிமையாளரின் அளவீடு சார்ந்த வரைபடங்களுக்கான உட்பிரிவுகள்.
  • நில ஆவணப் பதிவிற்கான நடைமுறைகள்.
  • வேளாண் நில ஆவணப் பதிவிற்கான இணைப்புகள்.

நகர்ப்புற நிலம் தொடர்பான நடவடிக்கைகள்

  • நகர்ப்புறங்களில் உள்ள நிலங்கள் தொடர்பான ஆவணங்களை புவிசார் தகவல் அமைப்பு வரைபடத்துடன் டிஜிட்டல்  மயமாக்கப்படும்.

தொழிலாளர்களுக்கான சேவைகள்

  • ஒரே படி நிலையில் தீர்வு காண்பதற்கான வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த -ஷ்ரம் இணையதள மேம்பாடு.
  • விரைவான மாற்றம் கண்டு வரும் தொழிலாளர்கள் சந்தை, திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புக் குறித்த  வெளிப்படையான தரவு  கட்டமைப்புகள்.
  • திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் வழங்குநரிடையே வேலைவாய்ப்பு தொடர்புக்கான நடைமுறைகள்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் வாத்சல்யா

  • தேசிய ஓய்வூதியத் திட்டம்வாத்சல்யா திட்டம்
  • சிறார்கள் பெயரில் அவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் வாத்சல்யா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சந்தா செலுத்த தேசிய ஓய்வூதியத்திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

பகுதி பி

மறைமுக வரிகள்

ஜிஎஸ்டி

  • வெற்றிகரமான சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம், வரிக்கட்டமைப்புகளை எளிமைப்படுத்தி சீரமைக்கப்பட்டு பிற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

துறை சார்ந்த சுங்கத்தீர்வைத் தொடர்பான  முன்மொழிவுகள்

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்

  • புற்று நோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளான ட்ரான்ஸ்டுஸுமாப் டெரக்ஸ்டெக்கான், ஓசிமெர்தினிப்துருவலுமாம்ப் ஆகியவற்றுக்கு சுங்கத் தீர்வையிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • ஊடுகதிர் உபகரணங்கள், மருத்துவ ஊடுகதிர் எந்திரங்களில் பயன்படுத்தப்படும் சமதளப் படுக்கைகளில் உற்பத்தித் திட்டங்களுக்கு அடிப்படை சுங்கத்தீர்வை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கைபேசி மற்றும் அதன் உதிரிபாகங்கள்

  • கைபேசிகள், அச்சிடப்பட்ட மின்னணு சர்க்கியூட்டுகள், மொபைல் மின்னேற்றிகளுக்கான அடிப்படை சுங்கத்தீர்வை 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த உலோகங்கள்

  • தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களுக்கான சுங்கத்தீர்வைகள் 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கு 6.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

பிறவகை உலோகங்கள்

  • ஃபெரோ நிக்கல் மற்றும் தாமிரத்துக்கான அடிப்படை சுங்கத் தீர்வைகள் நீக்கப்பட்டுள்ளது.
  • ஃபெரோஸ் கழிவுகள் மற்றும் நிக்கல் கேத்தோடு போன்ற உலோகங்களுக்கான அடிப்படை சுங்கத்தீர்வைகள் நீக்கப்பட்டுள்ளன.
  • தாமிரக் கழிவுக்கான சலுகையுடன் கூடிய அடிப்படை சுங்கத்  தீர்வையாக 2.5 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.

மின்னணு சாதனங்கள்

  • மின்சாரத்தைக் கடத்தாத ரெசிஸ்டர் உற்பத்திக்கான ஆக்ஸிஜன் இல்லாத தாமிரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய அடிப்படை சுங்கத் தீர்வைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ்

  • அலுமினியம் நைட்டிரேட் ரசாயனத்திற்கான அடிப்படை சுங்கத்தீர்வை 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

நெகிழிப் பொருட்கள்

  • பிவிசி ஃப்ளக்ஸ் பேனர்களுக்கான அடிப்படை சுங்கத்தீர்வை 10 சதவீத்த்திலிருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு சாதனங்கள்

  • குறிப்பிட்ட தொலைத் தொடர்பு சாதனங்களுக்கான சர்க்கியூட் போர்டுகளில் அடிப்படை சுங்கத்தீர்வை  10 சதவீத்த்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வர்த்தக வசதிகள்

  • உள்நாட்டு விமானப் போக்குவரத்து, படகு மற்றும் கப்பல் பயணங்களை ஊக்குவிக்கும் வகையில், குறிப்பிட்ட கால வரையறையுடன் கூடிய ஏற்றுமதிப் பொருட்களுக்கான இறக்குமதி சார்ந்த பழுது நீக்கும் நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் 6 மாதத்திலிருந்து ஓராண்டு காலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • விரிவாக்கப்பட்ட உத்தரவாதத்தின் கீழ் பழுது நீக்கும் நடவடிக்கைகளுக்காக மறு இறக்குமதிக்கான கால அவகாசம்,  3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய கனிமங்கள்

  • முக்கியத்துவம் வாய்ந்த 25 கனிமங்களுக்கான சுங்கத் தீர்வையிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • 2 முக்கிய கனிமங்களுக்கான அடிப்படை சுங்கத்தீர்வைக் குறைக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி

  • சூரியத் தகடுகள் மற்றும் மின்கலங்கள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் மூலனதப் பொருட்களுக்கு சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடல்சார் பொருட்கள்

  • அடை காக்கும் உயிரினங்கள், பாலிசீட் புழுக்கள், இறால் மற்றும் மீன் உணவுக்கான  அடிப்படை சுங்கத்தீர்வை 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • இறால் மற்றும் மீன் உணவு உற்பத்திக்குத் தேவையான பல்வேறு இடுபொருட்களுக்கு சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தோல் மற்றும் ஜவுளி

  • வாத்துகளின் கழிவுகளிலிருந்து  தயாரிக்கப்படும் உரவகைகளுக்கான அடிப்படை சுங்கத்தீர்வை குறைக்கப்பட்டுள்ளது
  • மீள்தன்மையுடன் கூடிய நூல் உற்பத்திக்கான மெத்தலின் டிப்நைன், டைசோசைனைட் பொருளுக்கு நிபந்தனையுடன் கூடிய அடிப்படை சுங்கத் தீர்வை 7.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நேர்முக வரிகள்

  • வரிகளை எளிமைப்படுத்துவதற்கான முயற்சிகள், வரி செலுத்துவோருக்கான சேவை மேம்பாடு, உறுதியான வரி நடவடிக்கைகள் மற்றும் சட்ட சிக்கல் குறைவான நடவடிக்கைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசின் நிதி மேம்பாடு மற்றும் நலத்திட்டங்களுக்கான வருவாய் இனங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • 2023-ம் நிதியாண்டில், 58% நிறுவன வரி தொடர்பான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.    2024-ம் நிதியாண்டில், தனிநபர் வருமான வரி முறையின் கீழ், மூன்றில் இரண்டு மடங்குக்கும் கூடுதல் எண்ணிக்கையிலான  வரிசெலுத்துவோர்  எளிமைப்படுத்தப்பட்ட வரி முறைகளை பயன்படுத்திக் கொண்டனர்.

அறக்கட்டளைகளுக்கான எளிமைப்படுத்தப்பட்ட டிடிஎஸ் நடைமுறைகள்

  • அறக்கட்டளைகளுக்கான இரண்டு வித  வரிவிலக்கு முறைகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
  • 5% வரிப்பிடித்தம் கொண்ட பல்வேறு கட்டணங்கள் இணைக்கப்பட்டு 2% வரிப்பிடித்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது
  • பரஸ்பர நிதி சார்ந்த அலகுகளின் மறு கொள்முதல் நடவடிக்கைகள் அல்லது யுடிஐ அலகுகளுக்கான 20% வரிப்பிடித்தம் விகிதம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
  • மின்னணு வர்த்தகம் புரிவோருக்கான வரிப்பிடித்த விகிதம், ஒரு சதவீதத்திலிருந்து பூஜ்யம் புள்ளி ஒரு சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • வரிப்பிடித்தம் தொடர்பான அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரை தாமதமாகச் செலுத்தப்படும் வரிப்பிடித்தங்கள்  குற்ற நடவடிக்கைகளாகக் கருதப்படாது.

எளிமைப்படுத்தப்பட்ட மறுமதிப்பீட்டு நடவடிக்கைகள்

  • 50 லட்சம் அல்லது அதற்கும் கூடுதலான வருமானத்திற்கான வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்களின் கணக்குகள் மதிப்பீட்டு ஆண்டிலிருந்து 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை மறு மதிப்பீடு செய்ய வகை செய்யப்பட்டுள்ளது.
  • சோதனை தொடர்பான வழக்குகளில் கால அவகாசம் 10 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.    

மூலதன லாபம் தொடர்பான எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் நெறிபடுத்தப்பட்ட நடைமுறைகள்.

  • குறுகிய கால மூலதன லாபத்திற்கான  குறிப்பிட்ட நிதிசார் சொத்துக்கள் மீதான வரி விகிதம் 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • அனைத்து விதமான நிதி சார் மற்றும் நிதி சாராத சொத்துக்களின்  மீதான நீண்டகால மூலதன லாபம் மீதான வரி விகிதம் 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • சில குறிப்பிட்ட  நிதி சார் சொத்துக்களின் மூலதன லாபத்திலிருந்து வரி விலக்கு பெறுவதற்கான உச்ச வரம்பு ஆண்டு ஒன்றுக்கு 1.25 லட்சமாக  உயர்த்தப்பட்டுள்ளது.

வழக்குகள் மற்றும் முறையீடு

  • சமரசத் தீர்வு 2024 திட்டத்தின் கீழ் வருமான வரி தொடர்பான  பிரச்சனைகளுக்காக மேல்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீர்வு காணப்படும்.
  • நேரடி வரிகள், உற்பத்தி மற்றும் சேவை வரி தொடர்பான மேல் முறையீடு செய்வதற்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி தீர்ப்பாயங்களில் தாக்கல் செய்யப்படும்  மேல்முறையீடுகளுக்கு  60 லட்சமாகவும், உயர்நீதிமன்றங்களில் , தாக்கல் செய்யப்படும்  மேல்முறையீடுகளுக்கு  2 கோடியாகவும். உச்சநீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும்  மேல்முறையீடுகளுக்கு  5 கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச வரிமுறைகளில் உறுதித் தன்மையை வழங்கும் வகையிலும், வரி தொடர்பான வழக்குகளைக் குறைக்கும் வகையில் பாதுகாப்பான துறைமுக விதிமுறைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு மற்றும் முதலீடு

  • புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் அனைத்துவித முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி நீக்கப்படுகிறது.
  • இந்தியாவில் கப்பல் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டு கப்பல் நிறுவனங்கள், உள்நாட்டில் மேற்கொள்ளும் போக்குவரத்து சேவைகளுக்கான வரி முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
  • நாட்டில், வைரத்திற்கான மூலப்பொருள்களை விற்பனை செய்யும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுரங்க நிறுவனங்களுக்கான பாதுகாப்புத் துறைமுக வரி விகிதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • வெளிநாட்டு பெருநிறுவனங்களுக்கான வரி விகிதம் 40 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

விரிவான வரிக் கட்டமைப்புகள்

  • எதிர்கால மற்றும் விருப்பத்தின் அடிப்படையிலான பங்கு பரிவர்த்தனைகளுக்கான வரிவிகிதங்கள் முறையே 0.2 சதவீதம் மற்றும் 0.1 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது.
  • பங்குகளை திரும்பப் பெறுவதன் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும்.

சமூகப் பாதுகாப்பு நன்மைகள்

  • தொழிலாளர் சம்பளத்திலிருந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பங்களிப்புக்காக பிடித்தம் செய்யப்படும் தொகை 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது
  • வெளிநாடுகளில் உள்ள 20 லட்சம் ரூபாய் வரையிலான சிறு அசையும் சொத்துக்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்காத நபர்கள்  மீதான நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

நிதி மசோதாவில் இடம் பெற்றுள்ள பிற முக்கிய முன்மொழிவுகள்

  • 2 சதவீத சமவிகிதத் தீர்வை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

புதிய வரிமுறையின் கீழ், தனிநபர் வருமான வரியில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள்.

  • புதிய வரி விகிதத்தை தேர்வு செய்யும் தனிநபர்களுக்கு நிலைக்கழிவுத் தொகை 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியக் கழிவுத் தொகை

15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது

  • திருத்தியமைக்கப்பட்ட வரி விகிதக் கட்டமைப்புகள்:

அடிப்படை வருமானம் ரூ.3 லட்சம் வரை பூஜ்ய சதவீதம் என்ற வரிவிகிதத்தில் மாற்றமில்லை

ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரையும்

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமும்,

ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதமும்,

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதமும்,

ரூ.15 லட்சத்திற்கு மேல் உள்ள வருமானத்திற்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

  • இது புதிய வருமான வரி முறையை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்
  • இந்தப் புதிய வரிவிகிதங்கள் மூலம் சம்பளம் பெறும் தனி நபர்கள் வருமான வரியிலிருந்து 17,500 ரூபாய் வரை சேமிக்க முடியும்

----

PKV/SV/KPG/DL


(Release ID: 2036071) Visitor Counter : 873