நிதி அமைச்சகம்
பொருளாதார ஆய்வறிக்கை 2023-24 இன் முன்னுரை, அரசுள், தனியார் துறை மற்றும் கல்வியாளர்களுடன் பல ஒப்பந்தங்கள் மற்றும் ஒருமித்த கருத்து மூலம் நாட்டை வழிநடத்த அழைப்பு விடுக்கிறது
Posted On:
22 JUL 2024 3:25PM by PIB Chennai
வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்குத் தேவையான முத்தரப்பு ஒத்துழைப்பு-மத்திய மற்றும் மாநில அரசுகள் நம்பிக்கையை கடைப்பிடிப்பது, தனியார் துறை தொலைநோக்கு சிந்தனை மற்றும் நியாயமான நடத்தையுடன் நம்பிக்கையை பிரதிபலிப்பது, பொதுமக்கள் தங்கள் நிதி மற்றும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பொறுப்பேற்பது ஆகியவை ஆகும். மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2023-24 பொருளாதார ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மூன்றாவது முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது அரசியல் மற்றும் கொள்கை தொடர்ச்சியைக் குறிக்கிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மீண்ட பிறகு, இந்தியப் பொருளாதாரம் வலுவான பாதையில் உள்ளது என்றும், புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்வதில் மீள்திறனை நிரூபிக்கிறது என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. எவ்வாறாயினும், மீட்சி நீடித்திருக்க, வலுவான ஆதரவு இருக்க வேண்டும், ஏனெனில் வர்த்தகம், முதலீடு மற்றும் காலநிலை போன்ற முக்கிய உலகளாவிய பிரச்சினைகளில் உடன்பாடுகளை எட்டுவது கடினமாகிவிட்டது. நிதியாண்டு 23 ஐ விட நிதியாண்டு 24 இல் வர்த்தக பற்றாக்குறை குறைவாக இருந்தது. நிதியாண்டு 24 க்கான நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7% ஆகும். தற்போதைய விலைகளில் அளவிடப்படும் நிதி அல்லாத தனியார் துறை மூலதன உருவாக்கம், நிதியாண்டு 21 இல் சரிவுக்குப் பிறகு நிதியாண்டு 22 மற்றும் நிதியாண்டு 23 இல் தீவிரமாக விரிவடைந்ததாக தேசிய வருமான தரவு காட்டுகிறது.
ரிசர்வ் வங்கியின் தரவுகளை மேற்கோள் காட்டி, புதிய மூலதனத்தின் டாலர் வரத்துகளின் அடிப்படையில் அளவிடப்படும் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீட்டு வட்டி நிதியாண்டு 23 இல் 47.6 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது நிதியாண்டு 24 இல் 45.8 பில்லியன் டாலராக இருந்தது. பல தனியார் பங்கு முதலீட்டாளர்கள் இந்தியாவில் உற்சாகமான பங்குச் சந்தைகளைப் பயன்படுத்திக் கொண்டு லாபகரமாக வெளியேறினர் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு லாபகரமான வெளியேற்றங்களை வழங்கும் ஆரோக்கியமான சந்தை சூழலின் அறிகுறியாகும், இது வரும் ஆண்டுகளில் புதிய முதலீடுகளைக் கொண்டுவரும்.
தொழில்துறைகளின் வருடாந்திர கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி, 2013-14 மற்றும் 2021-22 க்கு இடையில் மொத்த தொழிற்சாலை வேலைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 3.6% அதிகரித்துள்ளது என்றும், நூற்றுக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட சிறிய தொழிற்சாலைகளைவிட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் அவை 4.0% வேகமாக வளர்ந்துள்ளன என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில் இந்திய தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு 1.04 கோடியிலிருந்து 1.36 கோடியாக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
தனியார் துறை, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தை இந்த ஆய்வறிக்கை ஆதரித்தது. இந்தியர்களின் உயர்ந்த மற்றும் வளர்ந்து வரும் விருப்பங்களை வழங்குவதற்கும், 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதத்தை நோக்கிய பயணத்தை நிறைவு செய்வதற்கும், பொருளாதார வளர்ச்சி, வேலை உருவாக்கம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்தும் பல பிரச்சினைகள் மற்றும் அதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மாநில அரசுகளின் களத்தில் உள்ளன.
33,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மாதிரியின் முடிவுகளை மேற்கோள் காட்டி, நிதியாண்டு 20 மற்றும் நிதியாண்டு 23 க்கு இடையிலான மூன்று ஆண்டுகளில், இந்திய பெருநிறுவன துறையின் வரிகளுக்கு முந்தைய லாபம் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது, எனவே, நிதி செயல்திறனைப் பொறுத்தவரை, நடவடிக்கை தனியார் துறையிடம் உள்ளது.
அரசு, தனியார் துறை மற்றும் கல்வியாளர்கள் இடையே மற்றொரு முத்தரப்பு ஒத்துழைப்பு குறித்த யோசனையையும் இந்த ஆய்வறிக்கை ஆராய்கிறது. தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியில் முன்னேற இந்தியர்களை தயார்படுத்தும் பணியை மறுதொடக்கம் செய்வதே இந்த ஒத்துழைப்பாகும். இந்த பணியில் வெற்றிபெற, தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை அரசுகள் தளர்த்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034961
******
(Release ID: 2036055)
Visitor Counter : 68