நிதி அமைச்சகம்
மத்திய அரசின் சார்பில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான பிரதமரின் தொகுப்புத் திட்டம்: 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி மற்றும் இதர வாய்ப்புகள்
प्रविष्टि तिथि:
23 JUL 2024 1:16PM by PIB Chennai
மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நடுத்தர வகுப்பினரின் நலனில் அரசு கவனம் செலுத்துவதாக, குறிப்பாக, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
5 திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளுடன் கூடிய பிரதமரின் தொகுப்பை நிதியமைச்சர் அறிவித்தார். ரூ. 2 லட்சம் கோடி மத்திய அரசின் முதலீட்டுடன் 5 ஆண்டு காலத்தில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி மற்றும் பிற வாய்ப்புகளை அளிப்பதை இந்த தொகுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டில் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்காக ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரதமரின் தொகுப்பு நிதியின் ஒருபகுதியாக வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைக்காக, மூன்று திட்டங்களை அரசு செயல்படுத்தும் என்று அவர் கூறினார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்வதன் அடிப்படையிலும், முதல் முறை ஊழியர்களை அங்கீகரித்தலில் கவனம் செலுத்துதல், ஊழியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அளிப்பவர்களுக்கு ஆதரவு அளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் ஆகியவை இதில் அடங்கும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2035608
***
MM/IR/RS/KR
(रिलीज़ आईडी: 2035755)
आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
Bengali
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam