நிதி அமைச்சகம்
தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்
Posted On:
23 JUL 2024 12:55PM by PIB Chennai
மாநிலங்களுடனும், தனியார் துறையுடனும் இணைந்து, 100 நகரப்பகுதிகளில், முழுமையான உள்கட்டமைப்புடன் கூடிய, முதலீட்டுக்குத் தயாராக உள்ள தொழில் பூங்காக்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 தொழில் பூங்காக்களை உருவாக்க அனுமதி அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கனிமங்கள் இயக்கம்
உற்பத்தி, சேவைத் துறைக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வகையில், மத்திய பட்ஜெட் 2024-25-ல், கனிமங்களை உள்நாட்டு உற்பத்தி, முக்கிய கனிமங்களின் மறுசுழற்சி ஆகியவற்றுக்காக முக்கிய கனிமங்கள் இயக்கம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு அப்பால் கனிமங்களை வெட்டியெடுப்பதில் கவனம் செலுத்தும் வகையில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் அடிப்படையில் முதல் தொகுதி சுரங்க ஏலம் தொடங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
தொழிலாளர் தொடர்பான சீர்திருத்தங்கள்
மத்திய பட்ஜெட் 2024-25-ல் தொழிலாளர்களுக்கு பரந்த அளவிலான சேவைகளை வழங்குவதற்கான அறிவிப்புகளைக் கொண்டுள்ளது. மற்ற இணையதளங்களுடன் இ-ஷ்ரம் தளத்தின் ஒருங்கிணைப்பு தீர்வுகளை எளிதாக்கும் என்று நிதியமைச்சர் கூறினார்.
'அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை' நோக்கமாகக் கொண்டு, ஷ்ரம் சுவிதா, சமாதான் ஆகிய இணையதளங்களின் செயல்பாடுகளை எளிதாக்கவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
-----
(Release ID 2035583)
PLM/KPG/KR
(Release ID: 2035674)
Visitor Counter : 58
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam