நிதி அமைச்சகம்
இந்திய தொழிலாளர் சந்தை கடந்த 6 ஆண்டுகளில் முன்னேற்றமடைந்து, 2022-23-ல் வேலை வாய்ப்பின்மை 3.2 சதவீதமாக குறைந்துள்ளது
प्रविष्टि तिथि:
22 JUL 2024 3:17PM by PIB Chennai
தொழிலாளர் சந்தை குறியீடுகளில் இந்தியா கடந்த 6 ஆண்டுகளில் முன்னேற்றமடைந்துள்ளதாக பிஎல்எப்எஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது. இளைஞர்கள் மற்றும் பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் வேலையில் சேர்வது, மக்கள் தொகை மற்றும் பாலின விகிதத்தை முழுமையாக பயன்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு என மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பிஎல்எப்எஸ் ஆய்வுகளின் படி, அகில இந்திய அளவிலான வருடாந்தர வேலைவாய்ப்பின்மை விகிதம் (15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்) பெருமளவு குறைந்து, வேலையில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காண முடிவதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக 15-29 வயதுடைய இளைஞர்களிடையே காணப்பட்ட வேலைவாய்ப்பின்மை விகிதம் 2022-23-ல் 10 சதவீதமாக குறைந்துள்ளது. அத்துடன் வேலைவாய்ப்புகளைப் பெற்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் புதிய சந்தாதாராகும்18-28 வயதினரின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முக்கியத்துவம்
புதிய வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்க ஏதுவாக உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை, மூலதன செலவு அதிகரிப்பு, தொழிலாளர் நலன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
***
(Release ID: 2034951)
MM/AG/KR
(रिलीज़ आईडी: 2035664)
आगंतुक पटल : 96