நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

21 ஆம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இளைஞர்களை தயார்படுத்துகிறது தேசிய கல்விக் கொள்கை 2020

Posted On: 22 JUL 2024 2:39PM by PIB Chennai

தேசிய கல்விக் கொள்கை, 21 ஆம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இளைஞர்களை தயார்படுத்துகிறது என பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியாவில் பள்ளிக் கல்வி அமைப்பு, பொது மற்றும் தனியார் பள்ளிகளுடன், பல்வேறு சமூக-பொருளாதார பின்னணியைச் சேர்ந்த சுமார் 26 கோடி மாணவர்களுக்கு சேவை செய்வதாக கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் முன்னோடியான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து 613 செயல்பாட்டு உணவுத் திட்டங்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பு உணவாக மேம்படுத்தப்படும்

தற்போது நாடு முழுவதும் 5116 கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் 7.07 லட்சம் மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

பள்ளி, வாரியங்களுக்கிடையே சமத்துவத்திற்கான கொள்கை பரிந்துரைகள் வரைவு செய்யப்பட்டு வருகின்றன 2025-ம் நிதியாண்டில் 10,080 பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ரூ.5942.21 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


பிரதமரின் ஊட்டச்சத்துத் திட்டம்  2024-ம் நிதியாண்டில் (டிசம்பர் 2023 வரை) 10.67 லட்சம் பள்ளிகளில் 11.63 கோடி குழந்தைகள் பயனடைந்தனர் 2019 நிதியாண்டு முதல் 2024 நிதியாண்டு வரை (மார்ச் 2024 வரை) 29,342 பள்ளிகள் திறன் கல்வியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன

***

(Release ID: 2034927)

PKV/RR/KR


(Release ID: 2035518) Visitor Counter : 70