நிதி அமைச்சகம்

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது அவசியம்

Posted On: 22 JUL 2024 2:34PM by PIB Chennai

குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் நிலையில், இத்துறையை ஊக்குவிக்க, கடன் வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதுடன், நேரடி மற்றும் டிஜிட்டல் இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் அவசியம் என பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,  குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை 30 சதவீத அளவிற்கு பங்களிப்பு செய்வதுடன், 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கிறது. எனவே, இத்துறைக்கு அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, நிறுவன மேலாண்மை, மனிதவள மேலாண்மை, நிதி மேலாண்மை, தொழில்நுட்பம் போன்றவற்றில், இத்துறை சார்ந்த தொழில் முனைவோருக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுவதும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற, பயிற்சி பெற்ற உரிமையாளர்கள் – தொழில்முனைவோரின் நிறுவனங்களில் உற்பத்தி அதிகரிப்பதாகவும், ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034922

***

SMB/MM/KPG/KR/DL



(Release ID: 2035367) Visitor Counter : 45