நிதி அமைச்சகம்

விவசாயத்துறை வளர்ச்சிக்கென 5 அம்ச கொள்கை

Posted On: 22 JUL 2024 3:03PM by PIB Chennai

1960 ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறையால் உணவுப் பொருளை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா தற்போது வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளதை பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உணவு பாதுகாப்பு என்ற அடிப்படை நிலையிலிருந்து ஊட்டச்சத்து பாதுகாப்பு என்ற நிலைக்கு முன்னேற்றம் பெற வேண்டிய தருணம் இது என்று பொருாதார ஆய்வறி்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படை உணவு தேவையை காட்டிலும் பருப்பு வகைகள், சிறுதானியங்கள், பழ வகைகள், காய்கறிகள், பால், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதையும் அது சுட்டிக்காட்டுகிறது. உணவுப் பொருள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் துறைக்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும், இயற்கை ஆதாரங்களுடன் கூடிய ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டுமென்றும் பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு வேளாண் விளைப் பொருட்களுக்கான சந்தை செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் 5 அம்ச கொள்கைகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதை பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

***

(Release ID: 2034946)

SMB/SV/RR/KR



(Release ID: 2035040) Visitor Counter : 29