பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உர்சுலா வான் டெர் லேயனுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 19 JUL 2024 11:48AM by PIB Chennai

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உர்சுலா வான் டெர் லேயனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

"ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். உலகளாவிய நலனுக்கான உத்திபூர்வ கூட்டாண்மையை வலுப்படுத்த  இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறோம்."

 

***

(Release ID: 2034222)
PKV/RR/KR



(Release ID: 2034239) Visitor Counter : 66