பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள திரு கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 15 JUL 2024 11:39AM by PIB Chennai

நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கே.பி. சர்மா ஒலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான நட்புறவின் ஆழமான பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நெருக்கமாகப் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

"நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு திரு. கே.பி. சர்மா ஒலிக்கு @kpsharmaoli நல்வாழ்த்துகள்.  நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக பரஸ்பரம் பயனளிக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலாக இருக்கிறேன். @PM_nepal_"

***

(Release ID:2033201)

SMB/BR/RR


(रिलीज़ आईडी: 2033208) आगंतुक पटल : 123
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam