பிரதமர் அலுவலகம்
ஆஸ்திரிய இந்தியவியலாளர்களுடன் பிரதமர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
10 JUL 2024 9:47PM by PIB Chennai
இந்திய வரலாறு குறித்த நான்கு முன்னணி ஆஸ்திரிய இந்தியவியலாளர்கள் மற்றும் அறிஞர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். பௌத்த தத்துவ அறிஞரும் மொழியியலாளருமான டாக்டர் பிர்கிட் கெல்னர், நவீன தெற்காசியாவின் அறிஞர் பேராசிரியர் மார்ட்டின் கென்ஸ்லே, வியன்னா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் பேராசிரியர் டாக்டர் போரயின் லாரியோஸ் மற்றும் வியன்னா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் டாக்டர் கரின் ப்ரீசென்டான்ஸ்.ஆகியோருடன் அவர் உரையாடினார்.
இந்தியவியல் மற்றும் இந்திய வரலாறு, தத்துவம், கலை மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அறிஞர்களுடன் பிரதமர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். ஆஸ்திரியாவில் இந்தியவியலின் வேர்கள் குறித்தும், அதன் அறிவார்ந்த ஆர்வம் மற்றும் புலமையில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் அவர் விசாரித்தார். கலந்துரையாடலின்போது, இந்தியாவுடனான கல்வி மற்றும் ஆராய்ச்சி ஈடுபாடு குறித்து அறிஞர்கள் பேசினர்.
***
VL/BR/KV
(रिलीज़ आईडी: 2032366)
आगंतुक पटल : 92
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam