பிரதமர் அலுவலகம்
தலாய் லாமாவின் 89-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUL 2024 8:56PM by PIB Chennai
தலாய் லாமாவின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் விரைந்து குணமடையவும் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழப் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"புனிதர் தலாய்லாமாவின் @DalaiLama 89-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் அவர் வாழவும் பிரார்த்தனை செய்கிறேன்."
****
SMB/PLM/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2031373)
வருகையாளர் எண்ணிக்கை : 112
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam