பிரதமர் அலுவலகம்
பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரு ரைட் ஹானரபிள் சர் கெய்ர் ஸ்டார்மருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
05 JUL 2024 7:14PM by PIB Chennai
பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ரைட் ஹானரபிள் சர் கெய்ர் ஸ்டார்மருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05-07-2024) வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டிருப்பதாவது:
"பிரிட்டன் பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ள திரு கெய்ர் ஸ்டார்மருக்கு @Keir_Starmer மனமார்ந்த வாழ்த்துகள். பரஸ்பர வளர்ச்சியையும், செழிப்பையும் ஊக்குவித்து, அனைத்துத் துறைகளிலும் இந்தியா – பிரிட்டன் இடையே விரிவான உத்திசார் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன்."
----
VL/SMB/PLM/KPG/DL
(Release ID: 2031132)
Visitor Counter : 52
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam