ஆயுஷ்

ஸ்ரீநகரில் நடைபெற உள்ள 10-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் தலைமையேற்கிறார்

Posted On: 20 JUN 2024 5:33PM by PIB Chennai

10-வது சர்வதேச யோகா தினம் 2024, ஜூன் 21 அன்று  கொண்டாடப்பட இருப்பதையொட்டி, எஸ்கேஐசிசி-யில் நாளை நடைபெற உள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையேற்கவுள்ளார். “நமக்கும் சமுதாயத்திற்கும் யோகா” என்பதே இந்த ஆண்டின் மையக் கருத்தாகும். தனிநபர் ஆரோக்கியம் மற்றும் சமுதாய நல்லிணத்தை மேம்படுத்துவது யோகா முக்கியப் பங்கு வகிப்பதை எடுத்துக்காட்டும் வகையில், இந்த ஆண்டு மையக் கருத்து அமைந்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் கன்பத்ராவ் ஜாதவ் உள்ளிட்டோர் பிரதமர் தலைமையில்  நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உலகளாவிய சுகாதாரம் மற்றும் நலவாழ்வை மேம்படுத்த, ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். யோகாவின் பலன் பெருமளவிலான மக்களை சென்றடைய செய்யும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி  அனைத்து கிராமப் பஞ்சாயத்து தலைவர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில்  முழுமையான ஆரோக்கியத்திற்கு, யோகா மற்றும் சிறு தானியங்கள் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் சார்ந்த இயக்கமாக யோகா தினத்தை கொண்டாடுமாறு  கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2027107

***  

AD/MM/RS/DL



(Release ID: 2027178) Visitor Counter : 39