பிரதமர் அலுவலகம்

2024 ஜூன் மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஆலோசனைகள் மற்றும் உள்ளீடுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்கிறார்

Posted On: 18 JUN 2024 3:18PM by PIB Chennai

தேர்தல் காரணமாக குறுகிய இடைவெளிக்குப் பிறகு அகில இந்திய வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெறவிருப்பது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி ஜூன் 30, ஞாயிற்றுக்கிழமை அன்று ஒலிபரப்பாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மனதின் குரலின் 111-வது அத்தியாயத்துக்கான கருத்துக்கள் மற்றும் உள்ளீடுகளை MyGov தளம், நமோ செயலி அல்லது 1800 11 7800 என்ற எண்ணில் பதிவு செய்வதன் மூலம் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களை திரு மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் திரு மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"தேர்தல் காரணமாக சில மாத இடைவெளிக்குப் பிறகு, #MannKiBaat மீண்டும் வருகிறது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! இந்த மாத நிகழ்ச்சி ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். அதற்கான உங்கள் கருத்துக்களையும், உள்ளீடுகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். MyGov Open Forum, NaMo App-ல் எழுதுங்கள் அல்லது உங்கள் செய்தியை 1800 11 7800 என்ற எண்ணில் பதிவு செய்யுங்கள்”.

***

SRI/PKV/RR/KV

 



(Release ID: 2026191) Visitor Counter : 36